Google, Amazon போன்ற நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்ல வேண்டும் என்று நினைப்பவர்களின் கவனத்திற்கு

how to prepare resume in tamil

How to Prepare Resume in Tamil

வணக்கம் நண்பர்களே..! Google, அமேசான் என்று பெரிய நிறுவனங்களில் வேலை பார்ப்பது மிக பெரிய ஆசையாக இருக்கும். இந்த வேலை என்று இல்லை..! எல்லா வேலைகளுக்கும் அடிப்படையாக இருப்பது உங்களது விண்ணப்பம்(Resume) முக்கியமானது. இந்த விண்ணப்பத்தில் தான் உங்களது முழு விவரங்களையும் தெரிந்து கொள்ள முடியும். பெரிய நிறுவனங்களில் வேலைக்கு செல்ல விரும்புவர்கள் விண்ணப்பத்தில் இந்த விஷயங்களை சேர்க்க கூடாது என்று கூகுளில் சிகாகோவை இடமாக கொண்ட மூத்த பணியாளராக இருக்கும் எரிக்கா ரிவேரா கூறியுள்ளார் அது என்னென்ன என்று இந்த பதிவில் படித்து தெரிந்துகொள்வோம் வாங்க நண்பர்களே..

 இதையும் படியுங்கள் ⇒ Google-யில் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய மூன்று டிப்ஸ்..!

Resume Ready Pannuvathu Eppadi Tamil:

Resume-ல் டோர் நம்பர்லேந்து, தெரு, ஊர், வட்டம், மாவட்டம் என்று முழு விவரங்களையும் கொடுப்போம். ஆனால் இந்த மாதிரி முழு விவரங்களையும் கொடுக்க தேவையில்லை. நகரம் மற்றும் மாநிலத்தை மட்டும் கொடுத்தால் போதும் என்று கூறியுள்ளார்.

நீங்கள் வேலை பார்த்த விபரங்களை கொடுத்திருப்பீர்கள். 10 இடத்தில் பணியாற்றிய முன் அனுபவம் இருந்தால் அந்த எல்லா இடத்தையும் விண்ணப்பத்தில் பதிவு செய்திருப்பீர்கள். நீங்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு சம்மந்தமாக வேலை பார்த்திருந்தால் அதை மட்டும் பதிவு செய்தால் போதுமானது என்று ரிவேரா அவர்கள்  கூறியுள்ளார்.

உங்களது விண்ணப்பத்தில் I Helped, I Was Responsible for போன்ற வார்த்தைகளை பதிவிட வேண்டாம் என்று ரிவரே கூறியுள்ளார். இந்த வார்த்தைகள் பதிவிடாமல் Streamlined, Managed, Improved, Implemented, Strategized, Produced, Generated போன்ற வார்த்தைகளை பதிவிடலாம் என்று கூறியுள்ளார்.

நீங்கள் ஒரு நிறுவனத்துக்கோ அல்லது வேறு எங்கேயும் வேலைக்கு சென்றாலும் Reference இருக்கும் பட்சத்தில் விண்ணப்பத்திலே Reference Available upon Request என்று பதிவிட வேண்டும் என்று ரிவேரா கூறியுள்ளார்.

விண்ணப்பத்தில் குறிக்கோளை பதிவிட வேண்டாம் என்று கூறியுள்ளார். குறிக்கோளை பதிவிடுவது முற்காலத்தில் உள்ளது என்றும் இந்த காலத்திற்கு தேவையில்லாதது என்றும் ரிவேரா கூறியுள்ளார்.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் Today Useful Information In Tamil புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tips in Tamil