யார்விட்டில் ரூம் ஸ்பிரே பயன்படுத்துவீர்கள்..! இதை படித்துவிட்டு பயன்படுத்துங்கள்..!

room spray disadvantage in tamil

Room Spray Disadvantage in Tamil

பொதுவாக நாம் ஒரு இடத்தில் வசிக்கிறோம் என்றால் அந்த இடமானது சுத்தமாக இருக்கிறது என்றால் மட்டுமே அங்கு நாம் வசிப்போம். ஆனால் அந்த இடமானது சுத்தமாக இல்லையென்றால் அங்கு வசிக்க பிடிக்காது.

அதேபோல் தான் வேலைபார்க்கும் இடமாக இருந்தாலும் சரி, தூங்கும் அறையாக இருந்தாலும் சரி அங்கு ஏதாவது துர்நாற்றம் வீசுகிறது என்றால் அங்கு வேலைபார்க்கவும் பிடிக்காது, தூக்கவும் பிடிக்காது. அங்கு துர்நாற்றம் வீசுகிறது என்றால் முதலில் அங்கு ஏதாவது எலி, பூச்சி இறந்து இருக்கிறதா என்று பார்ப்போம், அப்படி இல்லையென்றால் நாம் உடனே வாசனை திரவியத்தை மேல் அடித்துக்கொள்வோம். அதேபோல் வீட்டுக்கும் ஒரு ரூம் ஸ்ப்ரே அடித்து விடுவோம். இதனை வீட்டிற்குள் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மை தீமையை பார்ப்போம் வாங்க..!

Room Spray Benefits in Tamil:

ரூம் ஸ்பிரேவில் நிறைய விதமான ரகங்கள் உள்ளது, மல்லிகை, ரோஜா, மாதுளை, என சொல்லிக்கொண்டே போகலாம். அந்த ரூம் ஸ்பிரேவை நாம் அறையில் மட்டும் அடிப்பதில்லை வீடு, அறை, அலமாரி, கழிவறை என்ற அனைத்து இடங்களில் அடித்து விடுவோம்.

இதனால் வீடே நல்ல மனமுடன் இருக்கும். அதேபோல் பீரோவிற்கும் அடிப்பார்கள், அதனால் ஆடையிலும் அந்த நறுமணம் வீசும்.

வெளி இடத்திற்கு சென்றாலும் அங்கு உள்ள அனைவரும் கேட்பார்கள், இது என்ன வாசனை திரவியம் என்று கேட்பார்கள். அந்த அளவிற்கு மனம் வீசும் ரூம் ஸ்பிரே.

இதை தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 யார் வீட்டில் அந்துருண்டை பயன்படுத்துவீர்கள்..! இந்த பதிவை படித்துவிட்டு அது ஆபத்தா என்று தெரிந்துகொள்ளுங்கள்

Room Spray Disadvantage in Tamil:

நம்முடைய நலனுக்காக பயன்படுத்தபட்டாலும் அந்த ரூம் ஸ்பிரேவில் நிறைய வகை வகையான ரசாயன பொருட்கள் கலக்கப்படுகிறது, ஆகையால் அதனை சுவாசிக்கும் போது நமக்கு சுவாச பிரச்சனைகள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

ஒரு சிலருக்கு ரூம் ஸ்பிரே சுவாசிப்பது பிடிக்கும் ஆனால் ஒரு சிலருக்கு பிடிக்காது. அதேபோல் அதனை சுவாச பிரச்சனை உள்ளவர்கள் இடத்தில் பயன்படுத்தாமல் இருக்கவேண்டும்.

சிலருக்கு திடீரென்று தலை வலி ஏற்படும் அதற்கு காரணம் வீட்டில் ரூம் ஸ்பிரே அடிப்பது தான். அதனை தொடர்ந்து சுவாசிப்பதன் மூலம் தலை வலி பிரச்சனை வரும்.

சிறு குழந்தைகள் இருக்கும் வீட்டில் இதை உபயோகிக்க வேண்டாம். காரணம் அவர்களுக்கு சுவாசிக்கும் காற்று சுத்தமான காற்றாக இருக்கவேண்டும். இல்லையென்றால் அவர்களுக்கும் சுவாச பிரச்சனை ஏற்படும்.

தோல் சம்பந்தப்பட்டவர்களுக்கு இது பக்க விளைவுகளை ஏற்படுத்தும். தோளில் ஒவ்வொமை ஏற்படும்.

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉Tips in Tamil