உப்பை இப்படி கூட பயன்படுத்தலாமா.! இவ்ளோ நாளா தெரியாம போச்சே

Advertisement

உப்பு பயன்கள்

வணக்கம் நண்பர்களே.! பொதுவாக உப்பை உணவின் சுவைக்காக பயன்படுத்துவோம். ஆனால் சமையலை தவிர வேற எதற்காவது பயன்படுத்திருப்போமா.! உப்பை பல முறைகளில் அதில் ஒன்று கலர் ஆகுவது நம்ப முடியவைல்லையா.! உப்பை வைத்து முகத்தை ஜொலிக்க வைக்க முடியும் முழு தகவல்களை தெரிந்து கொள்ள இதை கிளிக் செய்து பாருங்கள் உப்பை பயன்படுத்தி நம் ஸ்கின் கலரை அதிகரிக்கலாம்..! இனி தேவையில்லாத டிப்ஸை பாலோ பண்ணாதீங்க..! இந்த பதிவில் உப்பை வைத்து உங்களுக்கு தெரியாத பயனுள்ள குறிப்புகளை படித்து தெரிந்து கொள்வோம்.

உப்பு டிப்ஸ்:

கோதுமை மாவில் பூச்சி வராமல் இருக்க:

 உப்பு பயன்கள்

வீட்டில் கோதுமை மாவு, மைதா மாவு போன்றவை மொத்தமாக தான் வாங்கி வைப்போம். நாம் என்ன தான் சுத்தமாக மாவை வைத்தாலும் சில நாட்கள் ஆனதும் வண்டுகள் வர ஆரம்பித்துவிடும். இதனை தடுப்பதற்கு அந்த மாவில் சிறிதளவு உப்பு சேர்த்து கலந்துவிட்டால் பூச்சிகள் வராமல் இருக்கும். 

பாதம்  வலி நீங்க:

பாதத்தில் உள்ள வலி மற்றும் அழுக்குகள் நீங்குவதற்கு ஒரு பாத்திரத்தில் வெந்நீரை ஊற்றி அதில் சிறிதளவு உப்பு சேர்த்து கலந்து விடுங்கள். இந்த தண்ணீரில் இரவு தூங்குவதற்கு முன் கால் பாதத்தை தண்ணீரில் சிறிது நேரம் வைத்து எடுத்தால் வலி மற்றும் அழுக்குகள் நீங்கும். 

தேங்காய் மூடி கெட்டு போகாமல் இருக்க:

தேங்காய் மூடி கெட்டு போகாமல் இருக்க மூடியின் உள்பக்கம் முழுவதும் தூள் உப்பை அப்ளை செய்து ஒரு தட்டிலோ அல்லது ஏதாவது ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் தேங்காய் மூடியை குப்பற வைத்து விடுங்கள். 

இதையும் படியுங்கள் ⇒ கருப்பு உப்பு பற்றி உங்களுக்கு தெரியுமா..?

துணியில் சாயம் போகாமல் இருக்க:

Thuniyil sayam pogamal irukka

முதலில் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொள்ளுங்கள். அதில் சிறிதளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இந்த உப்பு தண்ணீரில் சாயம் போகின்ற துணியை அதில் கொஞ்சம் நேரம் ஊற வைத்து பிறகு அலசி காய போடுங்கள். இது போல் செய்தால் துணியில் சாயம் போகாது. 

தொண்டை வலி:

 மழைக்காலம் மற்றும் பனிக்காலத்தில் தொண்டை வலி ஏற்படும். இதனை தடுப்பதற்கு 1/2 டம்ளர் வெண்ணீர் எடுத்து கொள்ளுங்கள். அதில் கரிக்கின்ற அளவிற்கு கல் உப்பு சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இந்த தண்ணீரை வைத்து வாய் கொப்பளித்தால் தொண்டை வலி சரி ஆகிவிடும். 

மிக்சி ஜார் பிளேடு ஷார்ப்பாக:

மிக்சி ஜாரில் உள்ள பிளேடு அரைக்க அரைக்க அதனுடைய சார்ப்பு தன்மை குறைந்து விடும். இதற்கு மிக்சி ஜாரில் கல் உப்பு சேர்த்து அரைத்தால் பிளேடு சார்ப்பாகிவிடும். 

சிங்க் துர்நாற்றம் நீங்க:

 உப்பு பயன்கள்

சிங்கில் ஏதாவது அடைப்பு ஏற்பட்டிருந்தால் நாற்றம் ஏற்படும். இதனை தடுப்பதற்கு சிங்க் ஓட்டையில் கல் உப்பு அல்லது தூள் உப்பு சேர்த்து கொதிக்கின்ற வெந்நீரை ஊற்றுங்கள். இது போல் செய்வதினால் அதிலிருந்து வரும் துர்நாற்றத்தை நீக்கலாம்.

காய்கறிகளில் உள்ள இரசாயனத்தை நீக்க:

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் கல் உப்பு சிறிதளவு சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இந்த தண்ணீரில் காய்கறிகள் மற்றும் பழங்களை வாங்கி வந்தவுடன் கழுவி விட்டு ஸ்டோர் செய்து கொள்ளுங்கள். 

பல் வெள்ளையாக:

 உப்பு பயன்கள்

பல் துலக்கும் பேஸ்ட்டில் சிறிதளவு தூள் உப்பு சேர்த்து பல்லை துலக்குங்கள். இது போல் தினமும் பல் துலக்கினால் பல்லில் உள்ள மஞ்சள் கரை நீங்கி பல் வெள்ளையாக இருக்கும்.

வேக வைத்த முட்டையை ஈசியாக உரிக்க:

முட்டையை வேக வைத்து தோல் உரிக்கும் போது கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். அதற்காக முட்டையை வேக வைக்கும் போதே அதில் சிறிதளவு உப்பு சேர்த்து வேக வைத்தால் தோலை ஈசியாக உரித்துவிடலாம்.

கட் செய்த ஆப்பிள் கறுத்து போகாமல் இருக்க:

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து அதில் சிறிதளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இந்த உப்பு தண்ணீரில் கட் செய்த ஆப்பிளை கழுவி விட்டு எடுத்து வைத்தால் ஆப்பிள் கறுத்து போகாமல் இருக்கும்.

காலிபிளவரில் புழுக்கள் நீங்க:

 உப்பு பயன்கள்

 முதலில் காலி பிளவரை துண்டுகளை எடுத்து கொள்ளுங்கள். பின் ஒரு பாத்திரத்தில் வெண்ணீரை ஊற்றி அதில் உப்பு சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இந்த தண்ணீரில் காலிபிளவர் துண்டுகளை சேர்த்து கொஞ்ச நேரம் ஊற வைத்து கொள்ளுங்கள். இப்படி செய்வதினால் அதில் கண்ணனுக்கு தெரியாத புழுக்கள் நீங்கி விடும். 

இதையும் படியுங்கள் ⇒ கோவிலில் உப்பு கொட்டுவது எதற்காக தெரியுமா..!

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil

 

Advertisement