சமையலில் உப்பு அதிகமானால் என்ன செய்வது
நாம் அன்றாட சமைக்கும் உணவுகளை பார்த்து பார்த்து தான் சமைப்போம். எப்படி சமைத்தாலும் வீட்டில் உள்ளவர்கள் காரம் அதிகமாகிட்டு, புளிப்பு அதிகமாகிட்டு என்று சொல்லி கொண்டே இருப்பார்கள். நல்லா இருக்குன்னு சொல்ல மாட்டார்களா என்று நினைப்போம். உணவில் காரம் அதிகமாக இருந்தால் கூட சாப்பிட்டு விடலாம். அதுவே உப்பு அதிகமானால் ஒரு வாய் கூட எடுத்து சாப்பிட முடியாது. உப்பு அதிகமாகயிருந்தால் என்ன செய்வது என்று தடுமாறுவார்கள். மேலும் அந்த உணவை குப்பை தொட்டியில் தான் போடுவார்கள். அதனால் இனிமேல் உங்கள் சமையலில் உப்பு அதிகமானால் குப்பை தொட்டியில் போடா தேவையில்லை. அதற்கான டிப்ஸை இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
குழம்பில் உப்பு அதிகமானால்:
நீங்க செய்த குழம்பில் உப்பு மற்றும் காரம் அதிகமானால் வெங்காயத்தை நறுக்கி அதை எண்ணெயில் சேர்த்து வதக்கி கொள்ளவும். இதனை குழம்பில் சேர்க்க வேண்டும். இப்படி செய்தால் உப்பு சரியாக இருக்கும். காரத்தை குறைக்க தயிர் அல்லது தேங்காய் பாலை குழம்பில் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
மேலும் உருளைக்கிழங்கு அல்லது சவ்சவ் காயாய் சிறியதாக நறுக்கி குழம்பில் சேர்த்து கொதிக்க விடவும். இப்படி செய்தாலும் உப்பு அதிகமாகியிருந்தால் சரியாகிவிடும்.
ஆந்திரா ஸ்டைல் சிக்கன் பிரை எப்பா என்ன சுவை
தேங்காய் சட்னியில் உப்பு அதிகமாக இருந்தால்:
தேங்காய் சட்னியில் உப்பு அதிகமாக இருந்தால் சிறிதளவு பொட்டுக்கடலை மாவை சேர்த்தால் சரியாகிடும்.
ரசம் புளித்தால்:
ரசத்தில் புளிப்பு சுவை அதிகமாக இருந்தால் பூண்டு, சீரகம், வெங்காயம் சேர்த்து தாளித்து கொள்ளவும். அதன் பிறகு பருப்பு தண்ணீரை ஊற்றி கொதிக்க வைத்து இறக்கினால் ரசம் சுவையாக இருக்கும்.
பிரியாணியில் உப்பு காரம் அதிகமானால்:
நாம் செய்யும் பிரியாணியில் உப்பு காரம் அதிகமானால் வெங்காயத்தை நறுக்கி அதனை எண்ணெயில் சேர்த்து வதக்கி பிரியாணியில் சேர்த்து கொள்ளவும்.
உலர்ந்த திராட்சையை நெய்யில் சேர்த்து வதக்கி விட்டு பிரியாணியில் சேர்த்தால் காரம் குறையும்.
இல்லையென்றால் வெல்லப்பாகு, நாட்டுச்சர்க்கரை, எலுமிச்சம் பழச்சாறு ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை சேர்த்து கலந்து கொண்டாலும் காரம் குறையும்.
மேலும் இது போன்ற டிப்ஸினை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் | Tips |