சமையல் அறை டிப்ஸ் | Samayalarai Tips in Tamil
வீட்டை கவனித்துவரும் ஆண்களே மற்றும் பெண்களே அனைவருக்கும் வணக்கம். அதேபோல் இந்த பதிவும் உங்களுக்கு மிகவும் உதவிகரமாக பதிவு தான். அனைவரின் வீட்டில் அசைவம் சமைப்பது வாரம் நடைப்பெறும் ஒன்று தான். ஆனால் வீட்டில் அசைவம் சாப்பிடுவது என்பது அனைவருக்கும் பிடிக்கும் ஆனால் சமைத்து சாப்பிட்ட பிறகு வீடு முழுவதும் சமைத்த தூறுநாற்றம் வீசுகிறது. இந்த தூறுநாற்றம் வீசாமல் இருக்க வீடு முழுவதும் ஊதுவத்தி ஏற்றிவைத்து இருப்போம். அது எரியும் போது மட்டும் அந்த நாற்றம் வீசாமல் இருக்கும் அதன் பின் மறுபடியும் தூறுநாற்றம் வீசும். இனி அதனை பற்றி கவலை வேண்டாம். அதற்கு நல்ல தீர்வு வந்துவிட்டது. இதோ அதற்கான டிப்ஸ்..!
அரைத்த மாவை உடனே புளிக்க வைக்க இதையும் தெரிந்துகொள்ளவும் ⇒ மாவு அரைத்த உடனே புளிக்க வைப்பதற்கு டிப்ஸ்
குப்பையில் போடும் பொருட்களை வைத்து வீட்டை சூப்பராக வைச்சிக்கலாம்:
டிப்ஸ் -1
முதலில் எலுமிச்சை பழமானது உடலுக்கு எவ்வளவு நல்லது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. தெரியாதவர்கள் தெரிந்துகொள்ள கிளிக் செய்து தெரிந்துகொள்ள ⇒ எலுமிச்சை வேக வைத்த நீரை குடித்தால் கிடைக்கும் நன்மைகள் இது போன்ற நன்மைகளை பற்றி நாள்தோறும் Pothunalam.com பதிவில் பதிவிட்டு வருகிறோம்.
அதுபோல் எலுமிச்சை பழத்தை எப்போதும் ஜூஸ் போட்டு அதிகம் குடிப்பார்கள். அந்த பழத்தில் மறைந்துள்ள நன்மைகள் ஏராளமானவை. நாம் எப்போதும் ஜூஸ் குடித்துவிட்டு தோள்களை வீசி விடுவோம். அந்த தோள்கள் கூட நமக்கு பயனளிகிறது.
முதலில் 5 எலுமிச்சை மிக்சி ஜாரில் போட்டு நன்கு அரைத்துக்கொள்ளவும். அரைக்கும் போது தண்ணீர் ஊற்றி அரைத்துக்கொள்ளவும் அரைத்த பின் அதனை ஒரு துணியில் சிறிதாக தண்ணீர் ஊற்றி வடிகட்டிக்கொள்ளவும்.
இதனை மட்டும் வீட்டில் தெளித்தால் மனம் வீசாது அதனால் வாசனைக்காக அதில் பேக்கிங் சோடா 2 ஸ்பூன், விம் லிக்விட் 2 ஸ்பூன் ஊற்றி ஒரு தண்ணீர் பாட்டிலோ அல்லது ஸ்ப்ரே பாட்டிலோ இரண்டில் எது உங்களுக்கு கிடைக்கிறதோ அதில் இதனை ஊற்றிக்கொள்ளவும். நன்கு கலந்த பின்.
உங்களுடைய அடுப்பங்கரையில் கிடக்கும் குப்பைகளை ஒரு துணியால் துடைத்துவிட்டு நாம் செய்த ஸ்ப்ரே பாட்டிலை வைத்து அதில் தெளித்துக்கொள்ளாம். அதன் பின் இதனை தெளித்து துடைக்கலாம். இப்படி செய்வதால் வீட்டை ஆரோக்கியமாகவும் வைக்கலாம் அதேபோல் வீட்டில் எந்த துர்ருநாற்றமும் வீசாது. இதனை வைத்து நீங்கள் கேஸ் ஸ்டவ்யும் துடைக்கலாம். இதனை 3 நாட்கள் வரை பிரிஜியில் வைத்து பயன்படுத்தலாம். இனி அசைவம் சமைத்தால் நாற்றம் வீசும் கவலை கிடையாது.
இதையும் கிளிக் செய்து தெரிஞ்சிக்கோங்க ⇒ டாய்லெட் கஷ்டப்பட்டு கிளீன் பண்ணோம்னு யோசிப்பாங்க..!
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் Today Useful Information In Tamil புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information In Tamil |