எவ்வளவு பணம் வீட்டில் இருந்தாலும் சேமிக்க முடியாமல் செலவு ஆகிவிடுகிறதா..?

Advertisement

Saving Money Tips

ஒருசில வீட்டில் ஆண்கள் மற்றும் பெண்கள் என இருவரும் வேலைக்கு செல்வார்கள். மாதந்தோறும் ஆயிரக்கணக்கில் பணத்தினை சம்பாதிப்பார்கள். ஆனால் வீட்டில் சேமிப்பு என்பதே இல்லாமல் இருக்கும். மாதந்தோறும் சம்பாதிக்கும் பணம் அனைத்தும் வீட்டில் செய்யும் செலவிற்கே சரியாகிவிடுகிறது என்று தான் பெரும்பாலான நபர்கள் புலம்புகிறார்கள். வேலைக்கு செல்லும் நபர்களே இப்படி புலம்பினால் வேலைக்கே செல்லாமல் வீட்டில் இருப்பவரின் நிலைமை என்னவாக இருக்கும் என்று யோசித்து பார்த்தால் மிகவும் மோசமாக இருக்கிறது. அதனால் தான் இன்று சம்பாதிக்கும் பணத்தில் இருந்து குறிப்பிட்ட பணத்தினை எப்படி சேமிப்பது எப்படி என்றும் அத்தகைய சேமிப்பினை என்ன செய்ய வேண்டும் என்று தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl 

பணத்தை சேமிக்க சில வழிகள்:

மாதந்தோறும் பட்ஜெட்:

பணத்தை சேமிக்க சில வழிகள்

நீங்கள் சம்பாதிக்கும் பணமானது எவ்வளவு ரூபாயாக இருந்தாலும் கூட அதில் ஒரு பங்கில் சேமிப்பு என்பது கட்டாயமாக இருக்க வேண்டும். இவ்வாறு பணத்தினை சேமித்தால் மட்டுமே எந்த விதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் வாழ முடியும்.

அதற்கு முதலில் நீங்கள் பட்ஜெட் முறையினை பின்பற்ற வேண்டும்.

  • குழந்தைகள்
  • மருந்துகள்
  • வீட்டு உபயோகப்பொருட்கள்
  • அன்றாட தேவைகள்
  • காய்கறிகள்
  • வீட்டில் பணிபுரிவருக்கான சம்பளம்

மேலே சொல்லப்பட்டுள்ள அனைத்திற்கும் சரியான அளவில் உங்களின் சம்பளத்திற்கு ஏற்றவாறு பட்ஜெட்டினை திட்ட மிட வேண்டும்.

தேவையற்ற செலவுகள்:

உங்களுடைய மற்றும் உங்களின் குடும்பத்திற்கு தேவைப்பட்ட பொருட்களை வாங்கி கொள்ளலாம். அப்படி இல்லாமல் தேவையற்ற செலவினை செய்வது என்பதை முற்றிலும் தவிர்த்து கொள்ள வேண்டும்.

சுபநிகழ்ச்சிகள்:

பொதுவாக ஒரு சுபநிகழ்ச்சி அல்லது கெட்ட நிகழ்ச்சி இந்த இரண்டினையும் நாம் முன்கூட்டியே தீர்மானம் செய்ய முடியாது. அதனால் இதற்கு என்று நாம் தனிப்பட்ட முறையில் குறிப்பிட்ட தொகையினை ஒதுக்கி வைத்து விட வேண்டும்.

பணத்தை சேமிக்க இந்த டிப்ஸ் தெரிந்தால் போதும் நீங்கள் தான் ராஜா 

சுய உதவிக்குழுக்கள்:

சிலர் தனியார் அல்லது அரசு அளிக்கும் மகளிர் சுயஉதவிக்குழுக்களில் பணத்தினை அத்தியாவசிய தேவைக்காக எடுப்பார்கள். இதற்கு மாதந்தோறும் பணத்தினை எடுத்து வைத்து விடுங்கள்.

பணம் சேமிப்பு மற்றும் முதலீடு:

பணம் சேமிப்பு மற்றும் முதலீடு

ஆயிரக்கணக்கில் மாதாந்திர சம்பளம் வாங்கும் ஒரு நபர் மேலே சொல்லப்பட்டுள்ள முறைகளில் பணத்தினை பட்ஜெட் முறையில் பிரித்து வைத்து விட்டு.

அதன் பின்பு உங்களால் முடிந்த குறிப்பிட்ட தொகையினை மாதந்தோறும் போஸ்ட் ஆபீஸிலோ அல்லது மற்ற நம்பகமான நிதி நிறுவங்களிலோ விதிமுறைகளுக்கு உட்பட்டு உங்களின் பெயரிலோ அல்லது வீட்டில் உள்ளவர்களை பெயரிலோ சேமித்து வைத்தீர்கள் என்றால் எதிர்காலத்தில் உங்களுக்கான ஒரு நிலையான தொகை கிடைக்கும்.

நாம் சம்பாதிக்கும் பணம் எவ்வளவு ரூபாய் என்பதை விட நாம் எவ்வளவு சேமித்து வைத்து இருக்கிறோம் என்பதை பொறுத்தே நம்முடைய வாழ்க்கை ஆனது அமைகிறது.

பணத்தை சேமிப்பது நல்லதா.. முதலீடு செய்வது நல்லதா.. 

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil
Advertisement