கால்களில் சேற்று புண் உள்ளதா.! கவலை வேண்டாம் வீட்டிலேயே சரி செய்யலாம்.!

setru pun marunthu in tamil

சேற்றுப்புண் வர காரணம்

வணக்கம் நண்பர்களே.! மழை காலம் வந்தாலே பிரச்சனை தான். ஏனென்றால் உடலில் ஆரோக்கியத்தில் காய்ச்சல், சளி, இருமல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். இந்த பிரச்சனைகள் எல்லாம் வந்தால் மருத்துவரிடம் சென்று ஆலோசித்து மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டால் குணமாகிவிடும். இன்னொரு பிரச்சனை காலில் வரும் சேற்று புண். சேற்று புண் வந்ததும் மருத்துவரிடம் சென்று மருந்து வாங்கி போட்டாலும் மறுபடியும் சேற்று புண் பிரச்சனை ஏற்படும். இதற்கான நிரந்தர தீர்வை இந்த பதிவில் மூலம் தெரிந்து கொள்வோம்.

சேற்றுப்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்:

டிப்ஸ்:1

இரவு தூங்குவதற்கு முன் வெந்நீரில் சிறிதளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இந்த உப்பு தண்ணீரில் கால்களை கழுவுங்கள். பிறகு ஒரு காட்டன் துணியில் கால்களை ஈரம் இல்லாமல் துடைத்து கொள்ளுங்கள்.

ஒரு கிண்ணத்தில் மஞ்சள் தூள் சிறிதளவு தண்ணீர் சேர்த்து குழைத்து கொள்ளுங்கள். இப்போது இந்த குழைத்து வைத்த மஞ்சளை கால்களில் சேற்று புண் உள்ள இடத்தில் அப்ளை செய்யுங்கள். இரவு முழுவதும் அப்படியே இருக்கட்டும். காலை எழுந்ததும் காலை கழுவி கொள்ளுங்கள். 

இதையும் படியுங்கள் ⇒ வாய் புண் குணமாக மருத்துவம்

டிப்ஸ்:2

வேப்பிலை சிறிதள்வு எடுத்து அரைத்து கொள்ளுங்கள். அரைத்த வேப்பிலையில் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இரவு தூங்குவதற்கு முன் இந்த வேப்பிலை கலவையை காலில் சேற்று புண் எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கு அப்ளை செய்யுங்கள்.

டிப்ஸ்:3

தேங்காய் எண்ணெய் சிறிதள்வு எடுத்து கொள்ளுங்கள். அதில் கொஞ்சம் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இரவு தூங்குவதற்கு முன் இந்த தேங்காய் எண்ணெய் கலவையை சேற்று புண் உள்ள இடத்தில் அப்பளை செய்யுங்கள். காலை எழுந்ததும் கால்களை கழுவி கொள்ளுங்கள்.

டிப்ஸ்:4

மருதாணி இலைகளை அரைத்து சேற்று புண் உள்ள இடத்தில் அப்ளை செய்யுங்கள். காய்ந்ததும் கழுவி கொள்ளுங்கள்.

மேல் கூறப்பட்டுள்ள டிப்ஸில் எதவாது ஒன்றை தினமும் பயன்படுத்துங்கள். விரைவிலே சேற்று புண் குணமாகிவிடும். முக்கியமாக மேல் கூறப்பட்டுள்ள டிப்ஸை பயன்படுத்துவதற்கு முன் கால்களை உப்பு தண்ணீரில் கால்களை கழுவி விட்டு பிறகு மருந்துகளை அப்ளை செய்யுங்கள். 

சேற்று புண் வராமல் இருக்க செய்ய வேண்டியவை:

 முதலில் நீங்கள் தண்ணீரில் அதிகம் வேலை செய்வது தவிர்க்க வேண்டும். இல்லை நான் கண்டிப்பாக வேலை பார்க்க வேண்டும், அப்படியென்றால் தண்ணீரில் நின்று வேலை பார்த்ததும் கால்களை ஈரம் இல்லாமல் துடைத்து கொள்ளுங்கள்.  தினமும் தூங்குவதற்கு முன் உங்களின் கால்கள் மூழ்கிற அளவிற்கு ஒரு பாத்திரத்தில் வெந்நீர் எடுத்து கொள்ளுங்கள். அதில் சிறிதளவு உப்பு சேர்த்து கொள்ளுங்கள். இந்த தண்ணீரில் கால்களை சிறிது நேரம் வைத்து கொள்ளுங்கள். இது போல் செய்வதால் கால்களில் உள்ள கிருமிகள் அழிந்துவிடும்.  

இதையும் படியுங்கள் ⇒ வயிற்று புண் மற்றும் குடல்புண்ணுக்கான மூலிகை வைத்தியம் !!!

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉Tips in Tamil