Simple Bathroom Cleaning Tips Tamil
நாம் அன்றாடம் செய்யும் வேலைகளை இரண்டு விதமாக பிரித்து தான் பார்ப்போம். அதாவது கடினமான வேலை மற்றும் கடினமில்லாத வேலை என்று பேசும் போது கூட இப்படி தான் சொல்லுவோம். அப்படி பார்த்தால் வீட்டை மாப் போடுவது, பாத்ரூமை சுத்தம் செய்வது என இதுபோன்ற வேலைகள் தான் நம் கடினம் என்று நினைப்போம். அதன் படி பார்த்தால் மற்ற வேலைகளுடன் ஒப்பிடும் போது இந்த வேலை கடினமாக தான் இருக்கும். அதுவும் பாத்ரூம் சுத்தம் செய்வது என்பது மிகவும் கடினமான ஒன்றாக இருக்கும் என்பது தான் ஒவ்வொரு இல்லத்தரசிகளின் புலம்பலாக இருக்கும். இனி நீங்கள் இது மாதிரி புலம்பாமல் இருக்க பாத்ரூமை எளிய முறையில் சுத்தம் செய்வது எப்படி என்பதை தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
பாத்ரூம் பளிச்சென்று இருக்க டிப்ஸ்:
பாத்ரூம் எப்போதும் பளிச்சென்றும், சுத்தமாகவும் இருக்க முதலில் ஒரு கிளீனர் செய்ய வேண்டும். அதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருளை முதலில் எடுத்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- வினிகர்- 1 ஸ்பூன்
- பேக்கிங் சோடா- 1 ஸ்பூன்
- துணி துவைக்கும் பவுடர்- 2 ஸ்பூன்
- சூடு தண்ணீர்- 2 லிட்டர்
முதலில் ஒரு பவுலில் எடுத்துவைத்துள்ள வினிகர், பேக்கிங் சோடா மற்றும் துணி துவைக்கும் பவுடர் என இவற்றை எல்லாம் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
பின்பு 5 நிமிடம் கழித்து 2 லிட்டர் சுடு தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். இப்போது கலந்து வைத்துள்ள ஜெல்லை அதில் சேர்த்து நன்றாக 10 நிமிடம் வரை கலந்தால் போதும் பாத்ரூம் கிளீனர் தயார்.
பயன்படுத்தும் முறை:
இப்போது தயார் செய்து வைத்துள்ள ஜெல்லை நன்றாக பாத்ரூமில் தேய்த்து எந்த இடங்களில் எல்லாம் உப்பு கறை மற்றும் துர்நாற்றம் வீசுகிறதோ அங்கு எல்லாம் நன்றாக தேய்த்து ஒரு முறை சுத்தம் செய்தாலும் போதும் பாத்ரூம் பளிச்சென்று மாறிவிடும்.
அதன் பிறகு சுத்தமான தண்ணீரை ஊற்றி நன்றாக சுத்தம் செய்தால் போதும்.
பாத்ரூம் டைல்ஸ் பளபளப்பாக எலுமிச்சை சாறுடன் இதை சேர்த்து கிளீன் செய்யுங்க..
மேலும் இது போன்ற டிப்ஸினை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் | Tips |