Useful New Home Tips in Tamil
அதிகளவு வீட்டில் பெண்கள் மட்டும் தான் வேலை பார்க்கிறார்கள்..! முக்கியமாக சமையல் செய்வது என்றால் அதிகம் பெண்கள் தான். அவர்கள் வீட்டிலும் வேலை பார்த்துவிட்டு, வெளியிலும் வேலைக்கு செல்கின்றன.
வீட்டில் வேலை பார்த்தால் அதில் ஒரு சில வேலைகள் என்பது மிகவும் கொடுமையாக தான் இருக்கும், முக்கியமாக பூண்டு உரிப்பது வெங்காயம் உரிப்பது என்று நிறைய விஷயங்களை சொல்லிக்கொண்டே போகலாம். அதனை குறிப்பதற்கு நிறைய நேரம் எடுக்கும். அதனால் சில நேரங்களில் பிடித்ததை சாப்பிட முடியாது. அதிலும் முக்கியமாக அசைவ உணவுகளுக்கு வெங்காயம் பூண்டு அதிகளவு தேவைபடும்.
இனி கவலை வேண்டாம் பூண்டு உரிப்பதற்கும் மற்ற சில வேலைகள் செய்வதற்கும் முக்கியமான டிப்ஸ் சொல்ல போகிறேன் படித்து அதனை நீங்களும் ட்ரை பண்ணுங்க..!
Best Home Tips in Tamil:
டிப்ஸ்: 1
- முதலில் ஒரு கடாயை எடுத்து அடுப்பில் வைத்து அதில் பூண்டை போடவும். போட்டவுடன் 2 நிமிடங்கள் அதனை வார்க்கவும் அதிகளவு சூடு வைக்காமல் மிதமான தீயில் வைத்து வார்க்கவும்.
- பூண்டை கருக விடாமல் வார்க்கவும். 2 நிமிடத்திற்கு பிறகு அதனை எடுத்து ஒரு துணியில் நடுப்பகுதில் வைத்து அதில் சுருட்டிக்கொள்ளவும்.
- பின்பு அதனை கேரட் சீவும் கட்டையில் வைத்து உரசவும், பின்பு அதனை எடுத்து பார்த்தால் அதில் உள்ள பூண்டு தோல் அனைத்தும் தனியாக வந்திருக்கும். இதை ட்ரை பண்ணுங்க.
டிப்ஸ்: 2
- உருளைக்கிழங்கை சில நேரங்களில் தோல் உரித்து அதன் பின் சமைப்போம் அல்லது சிப்ஸ் போடும் போது தோல் உரிப்போம் ஆனால் அதனை உரிப்பது மிகவும் கடினம்.
- அதனால் கை சூடு தாங்கும் அளவிற்கு தண்ணீரை சூடு படுத்தி ஒரு பாத்திரத்தில் வைக்கவும் அதன் பின் அதில் முழு உருளை கிழங்குகளை போட்டு 15 நிமிடம் அப்படியே போட்டுவிடுங்கள் அதனை பின் அதனை எடுத்துகொள்ளுங்கள்.
- பின்பு பாத்திரம் விளக்கும் ஸ்கிரப்பர் புதிதாக எடுத்துக்கொள்ளவும், அதன் பின் அதனை உருளைக்கிழங்கின் மேல் வைத்து தேய்க்கவும் உருளைக்கிழங்கின் மீது உள்ள தோல் அனைத்தும் அப்படியே வந்து விடும்.
இதையும் ட்ரை பண்ணுங்க 👉👉 இல்லத்தரசிகள் சமையல் அறையில் கஷ்டப்படாமல் சமைக்க இந்த 5 டிப்ஸ் தெரிந்தால் போதும்..!
டிப்ஸ்: 3
- சில நாட்களில் தயிர் விரைவில் புளித்து விடும் அப்போது நீங்கள் பீங்கான் பாத்திரத்தில் தயிரை ஊற்றி வைத்தால் அதிகம் புளிப்பு சேராது அதேபோல் தேய்காய் துருவல் 1 ஸ்பூன் சேர்த்து பிரிஜியில் வைத்தால் புளிக்கவே புளிக்காது.
டிப்ஸ்: 4
- சில நேரங்களில் ஒரு எலுமிச்சை பழத்தில் உள்ள பாதியை மட்டுமே பயன்படுத்துவது வழக்கம் அல்லவா மீதி பாதியை பிரிட்ஜியில் வைப்பீர்கள் ஆனால் அதுவும் விரைவில் கெட்டுவிடும் அல்லது மேல் புறம் அப்படியே காய்ந்து விடும் அப்படி ஆகாமல் இருக்க இதை செய்யுங்கள்.
- முதல் பயன்படுத்திய இரு பத்தியை எப்போதும் தூக்கி எறிவது வழக்கம் ஆனால் அதேபோல் செய்வது மிகவும் தவறு இனி தூக்கி எரியாமல் இன்னொரு பாதியில் அதனை மூடியாக பயன்படுத்திக்கொள்ளுங்கள். அது சரியாக பொருந்தவில்லை என்றால் அதன் நடுப்பகுதியில் பல் குத்தும் ஸ்டிக்கை சொருகி வைக்கவும் இப்படி செத்தால் எலுமிச்சை பழம் காய்ந்து போகாது.
இதையும் ட்ரை பண்ணுங்க 👉👉 இது தெரியாமல் இவ்வளவு நாளாக வீட்டில் கஷ்ட பட்டோமே..! இந்த டிப்ஸ் சூப்பரா இருக்கே
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |