10 நிமிடத்தில் சிங்க் அடைப்பை நீக்க கல் உப்பு மட்டும் போதும்..

Advertisement

சிங்க் அடைப்பு 

எல்லாருமே வீட்டை அழகாக வைத்து கொள்ள வேண்டும் என்று தான் நினைக்கிறோம். ஆனால் எப்படி தான் பராமரித்தாலும் சில விஷயங்களை மட்டும் பராமரிப்பதில் பல பிரச்சனை வந்து விடுகிறது. முக்கியமாக கிச்சனில் இருக்கும் சிங்க். இதை நாம் சரியாக பராமரித்தாலும் எப்படியோ அடைப்பு வந்து விடுகிறது. இதில் அடைப்பு ஏற்பட்டாலும் கிராமப்புறத்தில் இருப்பவர்கள் பின்புறம் சென்று பாத்திரத்தை கழுவிவிடுவார்கள். அதுவே நகரத்தில் உள்ளவர்கள் அதில் தான் கழுவ வேண்டியிருக்கும். அடைப்பு ஏற்பட்டு நீங்காமல் இருந்தால் நாற்றம் வந்து விடும், அதனால் இந்த பதிவில் கிட்சனில் உள்ள சிங்க் அடைப்பு ஏற்படாமல்இருக்கவும், வந்த அடைப்பை நீக்குவதற்கும் டிப்ஸை பற்றி தான் பார்க்க போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

 

கிட்சன் சிங்க் அடைப்பை நீக்க:

நீங்கள் கிட்சனில் பாத்திரத்தை கழுவிய பிறகு சிங்கையும் ஸ்கிரப் பயன்படுத்தி தேய்த்து விட்டு கழுவி விட வேண்டும்.

அதன் பிறகு சிங்கில் பேக்கிங் சோடா 2 தேக்கரண்டி, எலுமிச்சை சாறு சிறிதளவு சேர்த்து 2 நிமிடம் விடவும். அதன் பிறகு அதில் கொதிக்கின்ற தண்ணீரை சிங்கில் ஊற்ற வேண்டும். இப்படி ஊற்றுவதால் சிங்கில் அடைப்பு நீங்கி விடும்.

வெறும் 5 நிமிடம் போதும் சிங்க் அடைப்பை அசால்ட்டா நீக்கி விடலாம் 

கிட்சன் சிங்க் அடைப்பு ஏற்படாமல் இருக்க:

சிங்க் அடைப்பு 

சிங்கில் அடைப்பு ஏற்பட்டதும் என்ன செய்வது என்று யோசிக்காமல் அவை வராமலே தடுப்பது எப்படி என்று யோசிப்பது தான் புத்திசாலித்தனம். அதனால் இப்போ நாம் சிங்க் அடைப்பு ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் தெரிந்து கொள்வோம்.

சிங்க் ஓட்டையில் ஒரு டிஸ்ஸு பேப்பர் போட்டு கொள்ளவும், அதன் மேல் 2 தேக்கரண்டி பேக்கிங் சோடா, 1 தேக்கரண்டி உப்பு, 1 தேக்கரண்டி வினிகர், 1 டம்ளர் தண்ணீர் சேர்த்து ஊற்ற வேண்டும். அதன் பிறகு டிஸ்ஸு எடுத்து விட வேண்டும். இதை பயன்படுத்திய பிறகு சிங்கில் ஒரு 3 மணி நேரம் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். அதன் பிறகு பயன்படுத்தி கொள்ளலாம்.

இந்த முறையை 2 வாரத்திற்கு ஒரு  வந்தால் கிட்சன் சிங்கில் அடைப்பு ஏற்படாது.

மேலும் இது போன்ற டிப்ஸினை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Tips
Advertisement