கிச்சன் சிங்க் அடைப்பு நீங்கி பளபளக்க இந்த ஒரு பொருள் போதும்..!

Advertisement

How to Clean Kitchen Sink Drain Naturally in Tamil 

நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் வீடு ஆனது எவ்வளவு பெரியதாக அல்லது சிறியதாக இருக்கிறதா என்பது முக்கியம் கிடையாது. ஏனென்றால் எந்த வீடாக இருந்தாலும் அதனை எப்படி சுத்தம் செய்கின்றோம் என்பதை பொறுத்து தான் அது அமையும். அந்த வகையில் நமது வீட்டிற்கு வரும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என அனைவரும் முதலில் வீட்டிற்கு வந்தவுடன் கிச்சனை தான் பார்க்க வேண்டும் என்று நினைப்பார்கள். இவ்வாறு பார்க்க வரும் போது கிச்சன் சுத்தமாக இருந்தாலும் கூட சிங்க் எப்படி வைத்து இருக்கிறோம் என்பதை தான் கவனிப்பார்கள். ஏனென்றால் கிச்சன் சிங்க் சுத்தமாக இருந்தால் மட்டுமே எந்த விதமான துறுநாற்றமும் இல்லாமல் பளிச்சென்று இருக்கும். ஆகவே இன்றைய பதிவில் கிச்சன் சிங்க்பளிச்சென்றும், அடைப்பு இல்லாமல் சுத்தமாக இருக்க செய்ய வேண்டிய டிப்ஸை பற்றி தான் பார்க்கப்போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

கிச்சன் சிங்க் கிளீனிங் டிப்ஸ்:

கிச்சன் சிங்கை முழுவதுமாக  சுத்தம் செய்ய முதலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை எடுத்துவைத்துக்கொள்ளுங்கள்.

  • துணி துவைக்கும் பவுடர்
  • வினிகர்
  • கல் உப்பு
  • எலுமிச்சை சாறு

இப்போது இந்த பொருட்கள் அனைத்தினையும் ஒரு பவுலில் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

டிப்ஸ்- 1

நீங்கள் கலந்து வைத்துள்ள கலவையை முதலில் சிங்கில் இருக்கும் ஓட்டைக்குள் சிறிதளவு ஊற்றி அப்படியே 5 நிமிடம் வரை வைத்து கொள்ளுங்கள்.

டிப்ஸ்- 2

 sink cleaning tips in tamil

அதன் பிறகு நீங்கள் தயாரித்த ஜெல்லில் 2 ஸ்பூன் அளவிற்கு சிங்க்கில் தெளித்து பின்பு நன்றாக தேய்த்து கொள்ளுங்கள். இப்படி தேய்ப்பதன் மூலம் சிங்க் நன்றாக பளிச்சென்று மாறிவிடும்.

இவ்வாறு செய்து முடித்த பிறகு சிங்கில் சுத்தமான தண்ணீரை ஊற்றி அலசி விடுங்கள். ஆகவே இதன் மூலம் சிங்க் அடைப்பு மற்றும் சிங்க் என இந்த இரண்டும் சுத்தமாக மாறி விடும்.

டிப்ஸ்- 3

மேலும் இவை இரண்டினையும் சுத்தம் செய்தாலும் கூட சிங்க் பிடிகள் பளிச்சென்று எப்போதும் இருக்காது. ஆகையால் நீங்கள் தயார் செய்த அதே ஜெல்லில் சிறிதளவு தொட்டு சிங்க் பிடியை நன்றாக தேய்த்து சுத்தம் செய்து விடுங்கள். பின்பு நல்ல தண்ணீரால் அவற்றையும் சுத்தம் செய்து விடுங்கள்.

எனவே நீங்கள் தயாரிக்கும் ஒரே ஒரு ஜெல்லின் மூலமாக 3 விதமாக சிங்கை எளிய முறையில் சுத்தம் செய்து விடலாம்.

பல வருஷ டைல்ஸ் கறையை பத்தே நிமிஷத்துல நீக்கலாம்! இதை மட்டும் செய்யுங்கள் போதும் 

மேலும் இது போன்ற டிப்ஸினை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Tips
Advertisement