வெயில் காலத்தில் சரும பாதுகாப்பு | Skin Care Tips in Summer at Home
பருவநிலை மாற்றம் என்பது ஆண்டுதோறும் நிகழக்கூடிய ஒன்றாக இருக்கிறது. அத்தகைய பருவநிலை மாற்றங்களில் நம்மால் தாங்கி கொள்ள முடியாத சூழல் என்பது கோடைகாலம் மட்டும் தான். கோடைகாலத்தில் ஒருநாளை நல்ல முறையில் கடந்து செல்வது என்பது மிகவும் சாத்தியமற்ற ஒரு செயலாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக நம்முடைய சருமத்தை கோடைகாலத்தில் பாதுகாப்பதற்காக நிறைய கிரீம்களை உபயோகப்படுத்துவோம். இவ்வாறு நாம் கிரீம்களை பயன்படுத்துவது என்பது நமக்கு நிரந்தரமான பலன்களை அளிக்கும் வகையில் இருக்காது. அதனால் தான் இன்று வீட்டில் இருக்கக்கூடிய பொருட்களை வைத்து சம்மர் சீசனிலில் இருந்து முகத்தை எவ்வாறு பராமரிப்பது என்பதற்கான டிப்ஸினை தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
சரும பராமரிப்பு டிப்ஸ்:
வெயிலின் தாக்கத்தில் இருந்து முகத்தை பராமரிப்பதற்கு வீட்டில் கிடைக்கக்கூடிய குளிர்ச்சியான பொருட்களை பயன்படுத்துவது எப்படி என்று டிப்ஸ்கள் ஒன்றன் கீழ் ஒன்றாக கொடுக்கப்பட்டுள்ளது.
டிப்ஸ் எண்- 1
வெள்ளரிக்காயில் உடலிற்கு மட்டும் இல்லாமல் முகத்திற்கு நன்மைகளை அளிக்கக்கூடிய சத்துக்களை கொண்டுள்ளது. அதனால் வெள்ளரிக்காயில் இருந்து ஜூஸ் தயார் செய்து அதனை முகத்தில் நன்றாக அப்ளை செய்து 15 நிமிடம் அப்படியே விட்டு விட வேண்டும்.
பின்பு 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவி விடுங்கள். இவ்வாறு நீங்கள் முகத்திற்கு செய்வதன் மூலம் முகத்தில் எண்ணெய் பசை, பருக்கள் இவற்றை எல்லாம் மென்மையாக வைக்க உதவுகிறது.
டிப்ஸ் எண்- 2
கோடைகாலத்தில் நாம் அனைவரும் பெரும்பாலும் வெள்ளரிக்காய் மற்றும் இளநீர் இதுபோன்றவற்றையினை தான் அருந்துவோம்.
இந்த இரண்டில் ஒன்றாகிய இளநீரை நம்முடைய முகத்திற்கு பயன்படுத்துவதன் மூலம் கோடைகாலத்தில் முகத்தை புத்துணர்ச்சியாகவும், எண்ணெய் பசை மற்றும் அழுக்குகள் என இவற்றை அனைத்தினையும் நீக்கி முகத்தை பளிச்சென்று வைக்கும்.
இவற்றை எல்லாம் நீங்கள் பெற வேண்டும் என்றால் இளநீர் தண்ணீரால் முகத்தை கழுவ வேண்டும்.
வெயில் காலத்தில் சாப்பிட கூடாத உணவுகள் எது தெரியுமா |
டிப்ஸ் எண்- 3
வெயில்காலத்தில் நம்முடைய முகம் ஆனது எப்போதும் எரிச்சலுடனும், பொலிவு இழந்தும் காணப்படும். இந்த பிரச்சனைக்கு தீர்வாக வெள்ளரிக்காய் ஜூஸ் மற்றும் பால் 2 ஸ்பூன் எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்பு இந்த இரண்டிணையும் நன்றாக கலந்து கொண்டு முகத்திற்கு அப்ளை செய்து பின்பு சிறிது நேரம் கழித்து முகத்தை கழுவி விடுங்கள். இதனை நீங்கள் செய்தால் போதும் கோடைகாலத்தில் கூட முகம் மிருதுவாகவும், வெள்ளையாகவும் இருக்கும்.
டிப்ஸ் எண்- 4
சருமத்தை பாதுகாக்க எப்படி பல வகையான இயற்கை டிப்ஸிகளை பின்பற்றுகிறோமோ அதே மாதிரி உணவுகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும். அதாவது வைட்டமின்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் நீர்சத்து அதிகம் உள்ள பழங்களை உட்கொள்வதன் மூலம் முகம் மற்றும் உடலிற்கு நீர்ச்சத்து கிடைப்பதோடு மட்டும் இல்லாமல் பாதுகாக்கவும் செய்கிறது.
டிப்ஸ் எண்- 5
ஒரு பவுலில் 2 ஸ்பூன் காபித்தூள் மற்றும் 1 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து இரண்டினையும் நன்றாக 5 நிமிடம் வரை கலந்து கொள்ளுங்கள். அதன் பிறகு தயார் செய்து வைத்துள்ள பேஸ்டை முகத்தில் அப்ளை செய்து 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
இவ்வாறு நீங்கள் செய்வதால் முகத்தில் காணப்படும் எரிச்சல், அரிப்பு மற்றும் இறந்த செல்கள் அனைத்தும் நீங்கி முகம் பளிச்சென்று இருப்பதை உணரலாம்.
கோடை காலத்தில் சாப்பிட வேண்டிய சிறந்த உணவுகள்
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |