Skin on Lips Peeling Tips
ஆண்களாக இருந்தாலும் சரி இல்லை பெண்களாக இருந்தாலும் சரி முகத்தை பராமரிப்பது என்பது அவ்வளவு சாத்தியமான செயல் கிடையாது. ஒரு வேளை நாம் அப்படி பார்த்து பார்த்து பராமரித்து வைத்து இருந்தாலும் கூட முகத்தில் பருக்கள், கண் கருவளையம், உதட்டில் கருமை மற்றும் உதட்டில் தோல் உரிதல் போன்ற பிரச்சனைகள் வந்து கொண்டு தான் இருக்கும். இந்த பிரச்சனையை எப்படி சரி செய்வது என்பது பலருடைய சிந்தனையாக இருக்கிறது. ஆகவே உங்களுடைய சிந்தனைகளில் ஒன்றுக்கான தீர்வை நீங்கள் இந்த பதிவின் மூலம் தெரிந்துக்கொண்டு பயன்பெறலாம். அப்படி என்ன பதிவு என்று யோசிக்கிறீர்களா..? வேறு ஒன்றும் இல்லை உதட்டில் தோல் உரிதலை சரிசெய்வதற்கான டிப்ஸினை பற்றி தான் பார்க்கப்போகிறோம்.
உதட்டில் தோல் உரிதல் காரணம்:
உதட்டில் இறந்த செல்களை மீண்டும் சரிசெய்வதற்கான தான் தோல் உரிகிறது. ஏனென்றால் உதட்டில் தோல் உரிந்து மீண்டும் புதிய தோல் உரிந்தால் தான் நமது உதடு அழகாகவும் மற்றும் மிருதுவாகவும் இருக்கும். இதுவே தோல் உரிவதற்கான காரணம் ஆகும்.ஆனால் ஒரு சிலருக்கு இத்தகைய தோல் உரிதல் பிரச்சனை அதிகமாக இருக்கும். இதனை சரி செய்வது என்பது மிகவும் எளிமையான ஒன்று. அதனை எப்படி சரிசெய்வது என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
உதட்டில் தோல் உரிதல் டிப்ஸ்:
தேங்காய் எண்ணெய்:
தேங்காய் எண்ணெய் நமக்கு தெரிந்த வரை முடி வளர்ச்சிக்கு நல்ல பலனை அளிக்கும் ஒரு பொருளாக இருக்கிறது. ஆனால் இது முடி வளர்ச்சிக்கு மட்டும் இல்லாமல் உதட்டில் தோல் உரிதல் பிரச்சனையையும் சரி செய்கிறது.
அதனால் ஒரு கிண்ணத்தில் சுத்தமான தேங்காய் எண்ணெய் 2 தேக்கரண்டி எடுத்துக்கொண்டு அதனை ஒரு காட்டன் துணியால் நனைத்து உதட்டில் தோல் உரிந்துள்ள இடத்தில் அப்ளை செய்தால் போதும். தேங்காய் எண்ணெயில் உள்ள ஆன்டி ஆக்ஸைட்டுகள் மற்றும் பாக்டீரியாவை எதிர்க்கும் பண்புகள் விரைவில் தோலை வேகமாக வளர செய்யும்.
வெண்ணெய்:
வெண்ணெயில் வைட்டமின் A, லினோக் மற்றும் ஓமிக் அமிலம் உள்ளது. இந்த இரண்டு வகையான அமிலங்களும் நிறைந்த வெண்ணெயை நமது உதட்டில் தோல் உரிந்த இடத்தில் போட்டு வருவதன் மூலம் விரைவில் தோல் உரிதல் பிரச்சனை சரி ஆகிவிடும். அதுவே இயற்கையான முறையில் தயாரித்த வெண்ணெயை உபயோகப்படுத்துவது நல்லது.
கண்ணை சுற்றியுள்ள கருவளையத்தை நிமிடத்தில் மறைய வைக்கும் சில டிப்ஸ்..! |
கற்றாழை:
நாம் சாதாரணமாக நினைக்கும் கற்றாழையில் தான் நமக்கு தெரியாத எண்ணில் அடங்காத சத்துக்கள் இருக்கிறது. கற்றாழையில் முடி முதல் முகம் மட்டும் இல்லாமல் ஆரோக்கியத்திற்கு மிக சிறந்த ஒரு மருந்தாக விளங்குகிறது.
ஆகையால் சுத்தமான கற்றாழை ஜெல் எடுத்துக்கொண்டு அதனை உதட்டில் தோல் உரிந்துள்ள இடத்தில் நன்றாக அப்ளை செய்து அதனை அப்படியே விட்டு விட வேண்டும்.
அதன் பிறகு 20 நிமிடம் கழித்த பிறகு உதட்டை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இதனை செய்தால் போதும் தோல் உரிதல் விரைவில் சரி ஆகிவிடும்.
2 நிமிடத்தில் உதடு கருமை நீங்கி சிவப்பாக இந்த டிப்ஸை ட்ரை பண்ணுங்க..!
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | Tips in Tamil |