இட்லி சாஃப்ட்டாக மல்லிப்பூ போல இருக்க இதை ட்ரை பண்ணுங்க..!

Advertisement

Idli Soft Iruka Tips in Tamil 

பெரும்பாலான வீடுகளில் இன்றளவும் கூட காலை நேரங்களில் சமைக்கும் ஒரு உணவு என்றால் அது இட்லியாக மட்டுமே இருக்கிறது. அதிலும் குறிப்பாக ஒவ்வொரு வீடுகளிலும் இட்லி பிரியர்கள் என்று இருந்து கொண்டு தான் உள்ளார்கள். அப்படி பார்க்கையில் இட்லி சாப்பிடுவதற்கு எளிமையாக இருந்தாலும் கூட அதற்கு மாவு தயார் செய்வது என்பது மிகவும் கடினமான ஒன்று. ஏனென்றால் அரிசி, உளுந்து என இவற்றை எல்லாம் தண்ணீரில் நன்றாக ஊற வைத்து அதன் பிறகு சுத்தம் செய்து மாவு அரைக்க வேண்டும். இவ்வாறு கஷ்டப்பட்டு மாவு அரைத்து இட்லி செய்தாலும் கூட இட்லி என்றால் மல்லிப்பூ போல சாஃப்ட்டாக இருக்க வேண்டும். இது என்ன கல்லு போல இருக்கிறது என்று தான் பலரது வீடுகளில் உள்ளவர்கள் கேட்பார்கள். இனி நீங்கள் செய்யும் இட்லியும் சாஃப்ட்டாக மல்லிப்பூ போல இருக்கும். ஏனென்றால் இன்றைய பதிவில் அதற்கான ஒரு டிப்ஸினை தான் பார்க்கப்போகிறோம்.

இட்லி மாவு அரைக்க டிப்ஸ்:

நாம் செய்யும் இட்லி ஆனது நாம் அரைக்கும் மாவினை பொறுத்தே அமையும். ஏனென்றால் மாவினை தண்ணீராகவோ அல்லது கெட்டியாகவோ அரைத்தோம் என்றால் அதற்கு ஏற்றவாறு தான் இட்லியும் அமையும்.

ஆகவே இட்லி மாவு அரைப்பதற்கான பக்குவத்தை முதலில் தெரிந்து இருக்க வேண்டும். அதற்க்கான பொருட்கள் என்னென்ன வென்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:

  • அரிசி- டம்ளர்
  • உளுந்து- 1 டம்ளர்
  • வெந்தயம்- 1 ஸ்பூன்
  • பொட்டு கடலை- 2 ஸ்பூன்
  • உப்பு- தேவையான அளவு

 இட்லி மாவு அரைக்க டிப்ஸ்

முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து அதில் எடுத்து வைத்துள்ள அரிசி மற்றும் பொட்டு கடலையை சேர்த்து நன்றாக ஊற வைய்யுங்கள். அதேபோல் மற்றொரு பாத்திரத்தில் எடுத்து வைத்துள்ளா உளுந்து மற்றும் வெந்தயத்தை சேர்த்து ஊற வைய்யுங்கள்.

இவை இரண்டும் நன்றாக ஊறிய பிறகு வழக்கமாக சுத்தம் செய்வது போல சுத்தம் செய்து விடுங்கள். பின்பு கிரைண்டரில் முதலில் உளுந்து மற்றும் வெந்தயத்தை சேர்த்து நன்றாக அரைத்து பாத்திரத்தில் வைத்து விடுங்கள்.

அடுத்தபடியாக கழுவி வைத்துள்ள அரிசி மற்றும் பொட்டு கடலையையும் சேர்த்து நன்றாக அரைத்து கொண்டு உளுந்து மாவுடன் சேர்த்து கொள்ளுங்கள்.

கடைசியாக அரைத்து வைத்துள்ள மாவுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கரைத்து கொள்ளுங்கள். இவ்வாறு அரைத்து வைத்துள்ள மாவில் நீங்கள் இட்லி செய்தால் போதும் இட்லி மல்லிப்பூ போல இருக்கும். வழக்கத்திற்கு மாறாக 2 இட்லி கூடவும் சாப்பிடலாம்.

ஸ்பைசியான முட்டை சில்லி ரெசிபி இப்படி ஒரு முறை செய்யுங்க 

மேலும் இது போன்ற டிப்ஸினை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Tips
Advertisement