Summer Hair Care Tips in Tamil
பொதுவாக வெயில் காலத்தில் தான் முடியை நன்றாக பாதுகாத்துக் கொள்ளமுடியும். ஏனென்றால் இந்த வெயில் காலத்தில் தான் அனைத்து ஹேர் பேக்கையும் போடமுடியும். ஆகவே தலைமுடியை வளர்க்க ஆசைபடுபவர்கள் இந்த டிப்ஸை கண்டிப்பாக ட்ரை பண்ணுங்க..! அதேபோல் வெயில் காலத்தில் நாம் எப்படி முடியை பாதுகாத்தாலும் நாம் செய்யும் சில தவறுகள் தான் நம்முடைய முடிக்கு பெரிதாக பாதிப்பை உருவாக்குகிறது. ஆகவே வெயில் காலம் வந்தவுடன் கீழ் கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸை படித்து உங்களின் முடியை பராமரித்துக் கொள்ளுங்கள்..!
Summer Hair Care Tips in Tamil:
Tips: 1
வெயில்காலத்தில் தினமும் தலை குளிக்க கூடாது. அதிகமாக வேர்க்கிறது என்பதாலும், அழுக்கு ஏற்படும் என்பதாலும் தலை குளிப்பதை தவிர்க்கவும். அதிகமாக தினமும் தலையை குளிப்பதால் வெயில் நேராக தலை முடியின் வேர் வரை என்று முடியில் எண்ணெய் சுரப்பதை தவிர்க்கும். அதேபோல் நம்முடைய தலை முடியில் தானாகவே எண்ணெய் சுரக்கும் சக்தி உள்ளது. இப்படி தினமும் தலை குளித்தால் அந்த எண்ணெய் சுரப்பது தடுக்கப்படுகிறது.
Tips: 2

அடுத்து வெயில்காலத்தில் ஹேர் ஸ்டெயில் Tool பயன்படுத்த கூடாது. ஏனென்றால் வெயில்காலம் என்பதால் அதிக சூடு இருந்தால் அந்த டூல்ஸ் சூடாக இருக்கும். ஆகவே அதனை நம்முடைய முடியில் பயன்படுத்த கூடாது.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 பொடுகினால் தலைமுடி அதிகமாக உதிர்கிறதா..? அப்போ இதை மட்டும் ட்ரை பண்ணுங்க..!
Tips: 3

வெயில் காலத்தில் ஹேர் பேக் போட்டால், அதில் நீர் சத்துக்கள் முடிக்கு கிடைக்கும் பொருட்களால் செய்யப்பட்ட ஹேர் பேக் மட்டும் போடவும். அப்போது தான் உங்கள் முடி வறண்டு போகாமல் வளவளவென்று வைத்துக்கொள்ள உதவி செய்யும். அதற்கு இயற்கையான பொருட்கள் என்றால் முதலில் தயிர், முட்டையின் வெள்ளைக்கரு, வாழைப்பழம், கற்றாழை இதுபோன்ற ஹேர் பேக் பயன்படுத்திக் கொள்ளவும்.
Tips: 4
அதேபோல் நீங்கள் ஷாம்பு போட்டு குளிக்கும் போது ஷாம்பை தண்ணீரில் போட்டு குளிப்பதற்கு பதிலாக தேங்காய் தண்ணீர் அல்லது பால், தயிருடன் போட்டு குளிப்பதன் மூலம் உங்கள் முடி வறண்டு போகாமலும் ஷாம்பில் உள்ள கெமிக்கலில் இருந்து நம்முடைய முடியை பாதுகாத்துக் கொள்ள உதவும்.
Tips: 5

தினமும் தலை குளிக்க கூடாது. அதேபோல் ஒரு நாள் விட்டு ஒரு நாள் மட்டும் தலைக்கு ஷாம்பு போட்டு குளிப்பது நல்லது. அதேபோல் தினமும் தலைக்கு ஷாம்பு போட்டு குளித்தால் உங்கள் முடி உடைந்து உதிர ஆரம்பிக்கும். அதேபோல் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குளிக்கும் போது தலை முடியில் எண்ணெய் இருப்பது போல் பார்த்துக் கொள்ளவேண்டும்.
மேலும் எண்ணெய் அப்ளை செய்யும் போது தலையை மசாஜ் செய்து கொள்ளுங்கள்..! இப்படி மசாஜ் செய்வதன் மூலம் உங்கள் முடிக்கு நல்ல இரத்த ஓட்டம் உருவாக தோன்றும். ஆகவே மசாஜ் செய்வது மிகவும் முக்கியமானது ஆகும். இந்த 5 டிப்ஸும் நன்கு முடியை பாதுகாத்துக் கொள்ள உதவி செய்கிறது.
| இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |















