Summer Home Cooling Tips Tamil
கோடை நெருங்கினாலே அனல் எங்கு சென்றாலும் துரத்தும். நிழல் , தண்ணீர் இது மட்டுமே நம்முடைய மனது தேடும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் குளுகுளு வென ஏசி அறையே கிடைத்தால் எப்படி இருக்கும்..? அது சொர்க்கத்தை காட்டிலும் மேலாக தெரியும். ஆனால் எத்தனைப் பேருக்கு அது வாய்க்கும்..? ஆனாலும் கவலையில்லை. எல்லாராலும் ஏசி வாங்க முடியாது. அதனால் தான் உங்க வீட்டையே ஏசியாக மாற்ற இந்த பதிவில் சில டிப்ஸ்களை பதிவிட்டுள்ளோம். அதனை பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.
வெள்ளை நிறம்:
வீட்டில் உள்ள ஜன்னல்களில் காட்டன் துணிகளை மாட்டி விடுங்கள். அதுவும் வெள்ளை நிற ஆடையை பயன்படுத்துவது நல்லது. ஏனென்றால் வெள்ளை நிற துணியானது வெப்பம் உள்ளே புகாமல் தடுக்க கூடிய திறன் இருக்கிறது. அதுவும் இந்த துணியை தண்ணீரில் நினைத்து மாட்டி விடுவது இன்னும் குளிர்ச்சியை ஏற்படுத்தும் .
இந்த ஜன்னலை இரவு நேரத்தில் திரண்டு வையுங்கள். ஏனென்றால் இயற்கையான காற்று வருவதன் மூலம் ரூமுக்குள் குளிர்ச்சியை ஏற்படுத்தும். காலை நேரத்திலும், மாலை நேரம், இரவு நேரத்தில் திறந்து வையுங்கள். மதிய நேரத்தில் ஜன்னலை மூடி வையுங்கள். இப்படி வைக்கும் போது வெப்பம் உள்ளே வராமல் இருக்கும்.
பசுமை செடிகள்:

வீட்டிற்குள் பசுமையான செடிகளை வளருங்கள். இதன் மூலம் வீடானது குளுமையாக இருக்கும். அதில் முக்கியமாக வீட்டின் வாசல், மாடி, மற்றும் சமையலறை பகுதியில் செடிகளை வளர்க்கலாம்.
பெட் வேண்டாம்:
நீங்கள் கட்டிலில் உறங்குபவர்களாக இருந்தால் பெட்டில் தூங்காதீர்கள். ஏனென்றல் இவை உடலில் சூட்டை ஏற்படுத்தும். இவற்றை தணிப்பதற்கு கம்பளிகள் போட்டு உறங்குவது உடலில் சூட்டை தனித்து குளிர்ச்சியை ஏற்படுத்தும்.
வெயில் காலத்தில் உடல் சூடு அதிகமாக இருக்கிறதா.! அப்போ இந்த ஒரு ஜூஸ் மட்டும் குடிங்க..
மாடி:
உங்களது மாடி வீடாக இருந்தால் மாடியில் தண்ணீரை தெளித்து விட வேண்டும். அப்படியில்லை என்றால் ஓலைகள் இருந்தால் அதனையும் மாடியில் போடலாம். இதன் மூலம் வெப்பம் தணிந்து குளிர்ச்சியை ஏற்படுத்தும்.
FAN:
சீலிங் பேனை தவிர்த்து விட்டு டேபிள் பேனை பயன்படுதுங்கள். ஏனென்றால் டேபிள் பேன் ஆனது வெப்பத்தை நீக்கி குளிர்ச்சியை ஏற்படுத்த கூடியது. அதனால் டேபிள் பேனை பயன்படுத்துங்கள்.
உங்களின் உடல் ஆரோக்கியம்:

- வீட்டை மட்டும் குளுமையாக வைத்து கொண்டால் நாம் குளுமையாக இருப்போமா என்றால் நிச்சயம் இல்லை. நம்மை குளுமையாக வைத்து கொள்வதற்கும் சில உணவுமுறைகளை பின்பற்ற வேண்டியிருக்கும்.
- எப்போதும் குடிக்கும் தண்ணீரின் அளவை விட இந்த சம்மரில் அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.
- நீர்ச்சத்து உள்ள காய்கறிகளாக எடுத்து கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக வெள்ளரிக்காய், தயிர், இழநீர் போன்றவை அன்றாட வாழ்க்கையில் எடுத்து கொள்ளலாம்.
- காரமான உணவு வகைகளை தவிர்க்க வேண்டும்.
- வெயிலில் வெளியே செல்லும் போது தலையில் துணியை கட்டி கொண்டு செல்லுங்கள். அப்போது தான் வெப்பம் ஆனது உங்களின் உடலில் உள்செல்வதை ஓரளவிற்கு தவிர்க்க வேண்டும்.
| மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |













