பெண்களே வீடு துடைக்க கஷ்டப்படுகிறீர்களா.! இனிமேல் இந்த டிப்ஸை Follow பண்ணுங்க

Advertisement

Sweeping and Mopping in Tamil

ஹாய் நண்பர்களே.! இன்று  பெண்கள் வீட்டை துடைப்பதற்கு ரொம்ப கஷ்டப்படுவார்கள். அவர்களுக்காக ஒரு அருமையான வழிகளை தெரிந்து கொள்வோம். வீட்டை மாப் போடுற வரைக்கும் யாரும் உள்ளே  வர கூடாது. அப்பறம் மண் கால்களுடன் உள்ளே வர கூடாது என்றெல்லாம் சொல்வார்கள். அவர்கள் என்ன தான் மாப் போட்டாலும் கொஞ்ச நேரத்திற்கு பிறகு மாப் போட்ட வீடு மாதிரியே இருக்காது. உங்கள் வீடு எப்பொழுதும் மாப் போட்ட வீடு மாதிரியும், வாசனையாகவும் இருப்பதற்கு என்ன செய்யலாம் என்று இந்த பதிவில் தெரிந்துகொள்வோம் வாங்க..

இந்த  டிப்ஸையும் செய்து பாருங்கள் ⇒ பிரிட்ஜில் உள்ள ஃபிரீசரில் அடிக்கடி ஐஸ்கட்டி கட்டுதா? அப்போ இந்த டிப்ஸை ட்ரை பண்ணுங்க!

Mopping Tricks in Tamil:

வீட்டை துடைப்பதற்கு ஒட்டடை குச்சியை வைத்து ஒட்டடை அடியுங்கள். அதன் பிறகு வீட்டின் ஓரத்தில் இருக்கும் குப்பைகள் எல்லாத்தையும் நல்லா பெருக்குங்கள். இது எல்லாத்தையும் பெருக்கினாலும் முடி மட்டும் வராது. அதனால் உங்களுக்கு சம கோவம் வரும் மாப் போடும் போது அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியுமா.?

வீட்டை கூட்டும் போது துடைப்பத்தில்  சின்ன சின்னதாக டேப்பை கட் பண்ணி ஒட்டி  கொள்ளுங்கள். அதாவது துடைப்பம் தரையில் படும் இடத்தில் இந்த டேப் இருக்க வேண்டும். டேப்பின் பசை பகுதி கீழ் பக்கம் தரையை தொடுமாறு இருக்கும் படி ஒட்ட வேண்டும். டேப்பை ரவுண்டாக சுற்றி துடைப்பத்தில் ஒட்டி விட்டால் அந்த டேப்பில் உள்ள பசையில் முடி வந்துவிடும். இப்படி சுத்தமாக கூட்டி விட்டால் துடைக்கும் போது முடி பிரச்சனை வராது.

மாப் போடும் போது Fan போடாதீங்க. மாப் போட்டால் தரை தானாகவே காய வேண்டும். சிறிது நேரம் கழித்து Fan போடுங்கள். மாப் போடும் போதே Fan போட்டால் அது காய்ந்த பிறகு வீட்டின் தரையில் கோடு கோடாக இருக்கும்.

ஒரு வாளியில்  வீடு துடைப்பதற்கு தேவையான அளவு தண்ணீரை ஊற்றவும். அதில் 1  தேக்கரண்டி  கல் உப்பு, டெட்டால் 1 மூடி, வீடு துடைக்க பயன்படுத்தும் லிக்விட் 1 மூடி, ஷாம்பூ 1/4 தேக்கரண்டி, ரச கற்பூரம் 2 நன்றாக தூள் செய்து சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த பொருட்களை எல்லாம் தண்ணீரில் நன்றாக கரைத்து விட்டு இந்த தண்ணீரைக் கொண்டு ஒரே ஒருமுறை மாப் போட்டாலே உங்கள் வீடு பளிச் பளிச்சென வாசமாக மாறிவிடும்.

வீட்டை துடைத்து விட்டு உங்களுடைய மாப்பை நல்ல தண்ணீரில் கழுவி  விட்டு  வெயிலில் காய வைக்க வேண்டும். ஈரமான மாப்பை  வீட்டுக்குள்ளேயே வைத்துவிட்டு, மீண்டும் அதை தண்ணீரில் நனைத்து வீட்டை சுத்தம் செய்வதன் மூலம் எந்த பயனும் இருக்காது. ஈர மாப்பிள்  இருக்கக்கூடிய கிருமி உங்கள் வீடு முழுவதும் பரவி விடும்.

மேல் கூறப்பட்டுள்ளது போல் செய்தால் வீட்டை அடிக்கடி மாப் போட தேவையில்லை.

இந்த டிப்ஸையும் செய்து பாருங்கள்⇒ இனி இந்த மாதிரி வாஷ் பேஷனை கிளீன் பண்ணுங்க..!

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் Today Useful Information In Tamil புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information In Tamil
Advertisement