Sweet Murukku Recipe in Tamil
தீபாவளி என்றால் முதலில் நினைவிற்கு வருவது பலகாரம் தான். அதன் பிறகு தான் டிரஸ், வெடி எல்லாம் ஞாபகத்திற்கு வரும். தீபாவளி வரதுக்கு ஒரு வாரத்திற்கு முன்னடியே என்ன பலகாரம் செய்வது என்று யோசித்து கொண்டே இருப்பார்கள். அதுமட்டுமில்லாமல் அக்கம் பக்கத்தில் உள்ள வீட்டில் உள்ளவர்களிடம் நீ என்ன பலகாரம் செய்ய போகிறாய் என்றெல்லாம் கேட்போம். அது போல எல்லா தீபாவளிக்கு ஒரே மாதிரியான பலகாரம் செய்யாமல் கொஞ்சம் வித்தியாசமாக இந்த மாதிரி முறுக்கை செஞ்சு பாருங்க.. சுவை சும்மா அள்ளும். சரி வாங்க எப்படி செய்வது என்று அறிந்து கொள்வோம்.
ஸ்வீட் முறுக்கு செய்ய தேவையான பொருட்கள்:
ஸ்வீட் முறுக்கு செய்ய தேவையான பொருட்கள் |
ஸ்வீட் முறுக்கு செய்முறை |
அரிசி மாவு- 1 கப் |
முதலில் பசி பருப்பை 1/4 கப் எடுத்து கடாயில் சேர்த்து வதக்கி கொள்ளவும். இதனை லேசாக சிவந்த நிறம் வந்ததும் இறக்கி தனியாக பவுடராக அரைத்து கொள்ளவும். |
பாசி பருப்பு- 1/ 4 கப் |
அடுத்து ஒரு பாத்திரம் வைத்து அதில் 1/4 கப் சர்க்கரை சேர்த்து அதனுடன் 1/2 கப் பால் சேர்த்து சர்க்கரை கரைகின்ற அளவிற்கு லேசாக சூடுபடுத்தி கொள்ளவும். தேவையான அளவு உப்பையும் அதிலேயே சேர்த்து விடவும். |
வெண்ணெய்- 2 தேக்கரண்டி |
அடுத்து ஒரு கிண்ணத்தில் அரிசி மாவு ஒரு கப், பாசி பருப்பு அரைத்து வைத்ததையும் சேர்த்து கொள்ளவும். 1 தேக்கரண்டி வெண்ணெய் சேர்த்து கொள்ளவும். மாவை கலந்து விட வேண்டும். |
சீனி- 1/2 கப் |
அடுத்து அதில் நாம் செய்து வைத்துள்ள தேங்காய் பாலை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து முறுக்கு மாவு பிசைவது போல பிசைந்து கொள்ள வேண்டும். மாவு அழுத்தமாக இருந்தால் கொஞ்சம் வெந்நீர் சேர்த்து கலந்து கொள்ளவும். |
தேங்காய் பால் -1/2 கப் |
அடுத்து முறுக்கு உரலை எடுத்து ஸ்டார் அச்சை போட்டு கொள்ளவும். இதில் மாவை வைத்து முறுக்காக பிழிந்து கொள்ளவும். |
எண்ணெய்- 1/2 லிட்டர் |
பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பிழிந்து வைத்த முறுக்கை போடா வேண்டும். இதில் நாம் தேங்காய் பால் மற்றும் சீனி சேர்த்ததால் சீக்கிரம் சிவந்து விடும். அதனால் அடுப்பை குறைவான தீயிலே வைத்து வேக விட வேண்டும். இரண்டு பக்கமும் சிவந்த நிறம் வந்ததும் அடுப்பை அணைத்து விடலாம். |
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> |
சமையல் குறிப்புகள்!!! |