தீபாவளி பலகாரம் சோமாஸ் சுவையான செய்வது எப்படி..?

Advertisement

Sweet Somas Seivathu Eppadi

பொதுவாக தீபாவளி என்றால் முதலில் செய்யும் பலகாரம் முறுக்கு தான். அந்த வகையில் சிலருக்கு நிறைய பலகாரம் செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அதனை எப்படி செய்வது என்று தெரியாமலே இருக்கும். அந்த வகையில் ஒரு சிலருக்கு சோமாஸ் மிகவும் பிடித்த ஒரு ரெசிபியாக இருக்கும். ஆனால் அதை செய்ய என்னென்ன பொருட்கள் வேண்டும் என்றும், எப்படி செய்ய வேண்டும் என்றும் தெரியாமல் இருக்கும். அந்த வகையில் இன்று தித்திக்கும் சுவையில் சோமாஸ் செய்வது எப்படி என்பதை தான் பார்க்கப்போகிறோம்.

சோமாஸ் செய்ய தேவையான பொருட்கள்:

  • மைதாமாவு- 125 கிராம்
  • நெய்- 2 ஸ்பூன்
  • ரவை- 2 ஸ்பூன்
  • ஏலக்காய்- 3
  • பொட்டு கடலை- 1/4 கப்
  • சர்க்கரை- 1/4 கப்
  • துருவிய தேங்காய்- 1/2 கப்
  • எண்ணெய்- தேவையான அளவு
  • உப்பு- தேவையான அளவு

இந்த தீபாவளிக்கு கொஞ்சம் வித்தியாசமா கோதுமை மாவு குலோப்ஜாம் இப்படி செய்யுங்க 

சோமாஸ் செய்யும் முறை:

 சோமாஸ் செய்யும் முறை

குறிப்பு- 1

முதலில் 1 பவுலில் எடுத்துவைத்துள்ள மைதா மாவு, ரவா, நெய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக 5 வரை பிசைந்து வைத்து கொள்ளுங்கள். பின்பு மாவிற்கு தேவையான அளவு தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்றாக பிசைந்து அப்படியே வைத்து விடுங்கள்.

குறிப்பு- 2

இப்போது அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் பொட்டு கடலையை சேர்த்து நன்றாக வறுத்து தனியாக வைத்து விடுங்கள். பின்பு 2 நிமிடம் கழித்து 1/2 கப் துருவிய தேங்காய் சேர்த்து மீண்டும் நன்றாக பொன் நிறமாக வரும் வரை வறுத்து தனியாக வைத்து கொள்ளுங்கள்.

குறிப்பு- 3

அடுத்து ஒரு மிக்சி ஜாரில் 1/2 கப் சர்க்கரை மற்றும் 3 ஏலக்காய் சேர்த்து நன்றாக பவுடர் போல அரைத்து வறுத்து வைத்துள்ள பொட்டு கடலை, தேங்காயுடன் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். அவ்வளவு தான் சோமாஸ் பூர்ணம் தயார்.

குறிப்பு- 4

கடைசியாக பிசைந்து வைத்துள்ள மைதா மாவுடன் சிறிய உருண்டை எடுத்துக்கொள்ள வேண்டும். பின்பு ஒரு தட்டில் சிறிதளவு எண்ணெயை தடவி கொள்ள வேண்டும். அடுத்து அதில் சோமாஸ் மாவினை தட்டில் வைத்து வட்ட வடிவமாக செய்து கொள்ளுங்கள்.

குறிப்பு- 5

இப்போது அந்த மாவில் செய்து வைத்துள்ள பூர்ணத்தை வைத்து மடித்து கொள்ளுங்கள். இத்தகைய முறையில் மற்ற மாவினையும் செய்து கொள்ளுங்கள்.

குறிப்பு- 6

கடைசியாக அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து பூரணம் வைத்து தயார் செய்து வைத்துள்ள சோமாஸ்சை அதில் போட்டு பொறித்து எடுத்தாலே போதும். இதேபோல் மற்ற அனைத்தினையும் எண்ணெயில் போட்டு எடுத்தால் போதும்.

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்!!!
Advertisement