உங்கள் வீட்டு டேபிள் Fan நல்லா ஓடும் ஆனால் காற்று வராமல் இருக்கிறதா..?இதை ட்ரை பண்ணுங்க புது Fan போல் ஓடும்..!

How to Make Table Fan Faster Tips in Tamil

How to Make Table Fan Faster Tips in Tamil

நண்பர்களே வணக்கம் இன்று அனைவரின் வீட்டிலும் இருக்க கூடிய பிரச்சனைக்கு ஒரு தீர்வாக இருக்க போகிறது. இப்போது மழைக்காலம் என்பதனால் பேன் அதிகம் தேவைப்படாது. ஒரு சிலருக்கு பேன் இல்லையென்றால் தூக்கமே வராது. ஆனால் மேல் இருக்கும் பேன்னை போடுவதற்கு பதிலாக டேபிள் பேன்னை தான் போடுவார்கள்.

சிலர் வீட்டில் இருக்கும் பேன் வாங்கி கொஞ்ச நாட்கள் தான் ஆகும். ஆனாலும் அந்த பேன் Speed-ஆக ஓடினாலும் காற்று குறைவாகவே வரவும் ஏன் என்று தெரியாமலும் மெக்கானிக்கிடம் கொடுத்து நல்லா இருக்கும் பேன்னில் பிரச்னையை வரைவைத்து விடுவோம். உங்கள் பேன் ஓடாமல் இருக்க ஒரே பிரச்சனை தான் அந்த பிரச்சனையை வீட்டிலேயே சரி செய்து விடலாம் வாங்க அது எப்படி என்று படித்து தெரிந்துகொள்வோம்..!

Table Fan Cleaning Tips in Tamil:

ஸ்டேப்: 1

முதலில் உங்களுடைய பேன்னை சுற்றி ஒரு வீடியோவாக எடுத்துக்கொள்ளவும். ஏனென்றால் அந்த பேன் நன்றாக பிட் செய்து வைத்திருப்பார்கள் அப்போது நமக்கு அது ஈசியாக இருக்கும் ஆனால் பேன் கழட்டிய பிறகு மாட்டும் போது நமக்கு சரியாக தெரியாது. ஆகையால் தான் அதனை ஒரு வீடியோவாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஸ்டேப்: 2

இரண்டாவதாக உங்களுடைய பேன்னில் உள்ள போல்டை கலக்கட்டவும் அதனை பின் அதனை பத்திரமாக ஒரு இடத்தில் வைத்துக்கொள்ளவும்.

ஸ்டேப்: 3

Table Fan Cleaning in tamil

மூன்றாவதாக மேல் கொடுக்கப்பட்டுள்ள படத்தில் உள்ளதை போல் உங்களில் பேனில் இருக்கும் அதனை கழட்டவும். அதன் பின் வின் விசிறியையும் கழட்டவும்.

ஸ்டேப்: 4

table fan cleaning brush in tamil

உங்களால் கழட்ட முடிந்தால் பின்புறம் இருக்கும் பாதியையும் கழட்டிக்கொள்ளவும். இல்லையென்றால் உங்களை வீட்டிலிருக்கும் பிரஸ்ஸை எடுத்து அதனை துடைக்கவும்.

உங்கள் மிக்சியை புதுசாக 👉👉 அழுக்காக இருக்கும் மிக்சியை புதிதாக மாற்ற இதை Try பண்ணுங்க..! அப்பறம் பாருங்க எப்படி இருக்கும் என்று..!

ஸ்டேப்: 5

 how to make table fan faster tips in tamil

இப்போது நன்றாக துடைத்த பின் மின் விசிறியை ஒரு ஈர துணியால் துடைக்கலாம். துடைத்த பின் அதன் காட்டன் துணியை கொண்டு துடைத்துக்கொள்ளலாம்.

ஸ்டேப்: 6

 how to increase table fan speed in tamil

பின்பு உங்கள் பேன்னில் முன் பக்கம் உள்ள வளையத்தை எடுக்கவும். அதனை உங்கள் வசதிக்கேற்ப கழுவியும் கொள்ளலாம் துடைத்துக்கொள்ளலாம்.

ஸ்டேப்: 7

கடைசியாகி அனைத்தையும் நன்றாக் காயவைத்து துடைத்து முதலில் வீடியோ எடுத்ததை வைத்து பேன்னை மாட்டிவிடவும். அதன் பின் உங்களுடைய பேன் நன்றாக ஓடும். அதிகமான ஒட்டடை இருந்தால் பேன் ஓடினாலும் காற்று வராது. ஆகவே உங்களுடைய பேன் ஓடவில்லை என்றால் முதலில் துடைத்து அதன் பின் போட்டு பாருங்கள் இல்லையென்றால் மெக்கானிக்கிடம் கொடுத்து சரி பார்த்துக்கொள்ளலாம்.

5 நிமிடம் போதும் அழுக்கு படிந்த வெள்ளை Shoe-ஐ புத்தம் புதிதாக மாற்றிடலாம்..!
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil