Teeth Gums Protection Tips in Tamil!
அனைவருமே முகத்தினை அழகாக வைத்துக்கொள்வதில் மட்டுமே அதிக கவனம் செலுத்துவோம். முக அழகாக இருக்க வேண்டும் என்றால் நாம் வாய் ஆரோக்கியத்திற்கும் அதிக கவனம் செலுத்த வேண்டும். வாய் ஆரோக்கியம் என்பது நம் உடலின் ஒட்டு மொத்த ஆரோக்கியத்துடன் இணைந்துள்ளது என்பதை கருத்தில் கொள்ளுங்கள்! வாய் என்பது பற்கள், ஈறுகளை உள்ளடக்கியது. நமது பற்களை அதிகமாக பாதுகாப்பது ஈறுகள் தான். அந்த ஈறுகளை பாதுகாக்க சில டிப்ஸ்களை இப்பதிவில் தெரிந்துக்கொள்வோம்!
பற்களின் ஈறுகளை பராமரிக்க உதவும் டிப்ஸ்:
பல் துலக்கும்போது மிகவும் அதிகமான அழுத்தம் கொடுத்து பல்லினை துலுக்க கூடாது. அழுத்தம் கொடுத்து பல் தேய்ப்பதினால் ஈறுகள் சேதமடையும்.
பல்லும் ஈறும் சேருகின்றன விளிம்பு பகுதியில் சேதம் அடையாமல் கவனமாக பல் துலக்க வேண்டும்.
சிக்ரெட் மற்றும் புகையிலை போன்ற பொருட்களை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அப்போதுதான் புற்றுநோய் போன்ற பல நோய்களில் இருந்து ஈறுகளை பாதுகாக்க முடியும்.
ஈறுகளில் இரத்த கசிவு போன்றவை இருந்தால் அது ஈறு நோயின் ஆரம்ப அறிகுறியாகும். உடனே பல் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.
இதையும் படியுங்கள்=> பற்கள் வகைகள் | Types of Teeth in Tamil!
6 மாதங்களுக்கு ஒரு முறை பல் மருத்துவரிடம் சென்று பற்களை சுத்தம் செய்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதால் பற்களில் இருந்து ஈறுகளுக்கு பரவக்கூடிய நோய்களில் இருந்து ஈறுகளை பாதுகாக்கலாம்.
நாம் அன்றாட உணவில் சாப்பிடுகின்ற உணவிற்கும் ஈறுகளின் ஆரோக்கியத்திற்கும் அதிக தொடர்பு உண்டு. உலர்ந்த திராட்சைகள், தானியங்கள், போன்றவை சாப்பிடுவதால் ஈறுகள் வலிமையுடன் இருக்கும். மேலும் வைட்டமின் C அடங்கிய எலும்பிச்சை, நெல்லிக்காய், ஆரஞ்சு சாப்பிடுவதால் ஈறுகள் ஆரோக்கியமாக இருக்கின்றன.
பல் துலக்கு போது ஈறுகளை விரல்கள் மூலம் மசாஜ் செய்ய வேண்டும். அவ்வாறு செய்வதினால் ஈறுகளின் இரத்தஓட்டம் அதிகரித்து புத்துணர்ச்சியாக இருக்கும்.
பல் துலக்கும் பிரஸினை இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும். அவ்வாறு செய்வதினால் ஈறுகள் பாதிக்கப்படாமல் இருக்கும். நஞ்சி, நூல் போன்று ஆகும் வரை பயன்படுத்தக்கூடாது.
தினசரி இரண்டுவேளை சுத்தமாக பல் துலக்க வேண்டும். ஈறுகளை பாதுகாக்க கூடிய புளோரைடு கலந்த டூத் பேஸ்டினை பயன்படுத்த வேண்டும்.
சாப்பிட்டபின் நன்கு வாய் கொப்பளிக்க வேண்டும். இதனால் உணவு துகள்கள் பற்களின் இடுக்குகளில் தங்காமல் இருக்கும்.
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |