பற்களில் உள்ள கறைகளை நீக்குவது எப்படி.?
வணக்கம் நண்பர்களே.! பற்கள் அழகாகவும், வெள்ளையாகவும் இருந்தால் தான் சிரிக்கும் போது அழகாக இருக்கும். பற்களை தினமும் இரண்டு முறை துலக்க வேண்டும். அதாவது காலையில் எழுந்ததும், இரவு தூங்குவதற்கு முன்பும் பல் துலக்க வேண்டும். இரவு தூங்குவதற்கு முன்பு பல் துலக்கினால் தான் வாயில் உள்ள கிருமிகள் எல்லாம் நீங்கியிருக்கும். நீங்கள் இரவு சாப்பிட்ட பிறகு வாயில் அப்படியே இருக்கும். அதனால் இரவு தூங்குவதற்கு முன் பல் துலக்குவது அவசியமானது. நீங்கள் இரண்டு முறை பல் துலக்கினாலும் பல்லில் உள்ள கறைகள் அப்படியே இருக்கிறதா.! வாங்க இந்த பதிவில் பற்களில் உள்ள கறைகள் நீங்கி பளிச்சென்று ஆகுவதற்கு என்ன செய்யலாம் என்று தெரிந்து கொள்வோம்.
பற்களில் உள்ள மஞ்சள் கறைகளைப் போக்கும் சில எளிய வழிகள்:
குறிப்பு:1
முதலில் ஒரு கேரட் எடுத்து சீவி கொள்ளுங்கள். பின் சீவிய கேரட்டிலுருந்து சாறாக பிழிந்து கொள்ளுங்கள். கேரட் சாற்றில் எலும்பிச்சை சாறு சிறிதளவு எடுத்து கொள்ளுங்கள். அதில் உப்பு சிறிதளவு சேர்க்கவும். கடைசியாக நீங்கள் பல் துலக்கும் பேஸ்ட்டை தேவையான அளவு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை உங்களது பற்களில் பயன்படுத்தி தேயுங்கள். விரைவில் பற்களில் உள்ள கறைகள் நீங்கி வெள்ளையாக மாறிவிடும்.
இதையும் படியுங்கள் ⇒ பற்களில் கறைகள் மற்றும் மஞ்சள் நிறமாக உள்ளதா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க
குறிப்பு:2
நீங்கள் எந்த பேஸ்ட் பயன்படுத்தி பல் துலக்கினாலும் அதில் சிறிதளவு உப்பு சேர்த்து கலந்து பல் துலக்குங்கள். உப்பை பயன்படுத்துவதால் பற்களில் உள்ள கறைகள் நீங்கிவிடும்.
குறிப்பு:3
முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்து கொள்ளுங்கள். அதில் பேக்கிங் சோடா 1 தேக்கரண்டி, உப்பு 1 தேக்கரண்டி சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையை மாதத்தில் இரண்டு முறை பயன்படுத்தி பல் துலக்குங்கள்.
குறிப்பு:4
தேங்காய் எண்ணெயை சிறிதளவு எடுத்து வாயில் வைத்து துப்பி விடுங்கள். பிறகு பிரஸ் செய்யுங்கள். இது போல் செய்வதினால் வாயில் உள்ள துர்நாற்றம் நீங்கி பற்கள் வெள்ளையாக மாறிவிடும்.
குறிப்பு:5
வாழைப்பழத்தில் உள்ள தோல்களை எடுத்து கொள்ளுங்கள். இந்த தோலை பயன்படுத்தி பற்களில் தேயுங்கள். பிறகு வெந்நீரில் வாயை கொப்பளியுங்கள். தினமும் இந்த குறிப்பை பின்பற்றுங்கள். விரைவில் பற்களில் உள்ள கறைகள் நீங்கி வெள்ளையாக மாறிவிடும்.
இதையும் படியுங்கள் ⇒ பல் ஈறு பலம் பெற
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |