Thalai Mudi Tips in Tamil
இன்றைய காலக்கட்டத்தில் பெண்கள் முதல் ஆண்கள் வரை அனைவருக்குமே ஏதாவது ஒரு தலைமுடி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உள்ளது. இதற்கு காரணம் இன்றைய உணவு பழக்கவழக்கங்கள் மற்றும் சுற்றுப்புற சூழலில் உள்ள மாசுகள் தான். அதனால் நமது தலைமுடியை நாம் தான் பாதுக்காப்பாக பார்த்துக் கொள்ளவேண்டும்.
அப்படி உங்களின் தலைமுடியை நன்கு பராமரிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளவர்களுக்காகத்தான் இன்றைய பதிவு. அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன்பெறுங்கள்.
இதையும் படியுங்கள் => வெறும் 7 நாட்களில் தலை முடி வளர்வதை நீங்களே பார்ப்பீர்கள்..! இந்த எண்ணெயை மட்டும் தடவி பாருங்கள்
Natural Hair Care Tips in Tamil:
டிப்ஸ் – 1
நமது தலையில் உள்ள பேன்,பொடுகு போன்றவை நீங்கி தலைமுடி நன்கு வளர இந்த டிப்ஸிற்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.
- வேப்பிலை – 2 கைப்பிடி அளவு
- கற்றாழை ஜெல் – 2 டேபிள் ஸ்பூன்
- சின்ன வெங்காயம் – 7
- தயிர் – 4 டீஸ்பூன்
- தண்ணீர் – தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு மிக்சி ஜாரில் 2 கைப்பிடி அளவு வேப்பிலை, 2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல், 7 சின்ன வெங்காயம் மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்துக்கொள்ளுங்கள்.
பின்னர் இதனுடன் 4 டீஸ்பூன் தயிர் சேர்த்து நன்கு கலந்து தலையில் தடவி 1/2 மணிநேரம் வைத்து பின்னர் தலைக்கு குளியுங்கள். இதனை வாரத்திற்கு 1 முறை என தொடர்ந்து செய்து வருவதன் மூலம் உங்கள் தலையில் உள்ள பேன், பொடுகு தொல்லை நீங்கி தலை முடி நன்கு வளருவதை நீங்களே காணலாம்.
டிப்ஸ் – 2
இந்த டிப்ஸிற்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.
- கருவேப்பிலை – 2 கைப்பிடி அளவு
- தயிர் – 6 டேபிள் ஸ்பூன்
- சீரகம் – 1 டீஸ்பூன்
- தண்ணீர் – 2 டம்ளர்
- இஞ்சி – 1 சிறியதுண்டு
- உப்பு – 2 டீஸ்பூன்
செய்முறை:
ஒரு மிக்சி ஜாரில் மேலே கூறியுள்ள அனைத்து பொருட்களையும் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதனை வடிக்கட்டி குடியுங்கள்.
இந்த ஜூஸை வாரத்திற்கு இருமுறை என தொடர்ந்து குடித்து வருவதன் மூலம் உங்கள் உடல் எடை குறையும், தலைமுடியின் வளர்ச்சி அதிகரிக்கும் மற்றும் நரைமுடியை வராது.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: 👉 https://bit.ly/3Bfc0Gl
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |