Bathroom Cleanig Using Tea Tree Oil
என்னதான் சமையலறை மற்றும் பாத்ரூமை பளிச்சென மற்ற முயற்சித்தாலும், அது நடப்பதில்லை. கிச்சன் டயில்ஸை கூட நாம் ஓரளவுக்கு பளிச்சென்று மாற்றிவிடலாம். ஆனால், இந்த பாத்ரூம் டைல்ஸை அப்படி மாற்றுவது மிகவும் கடினம். ஏனென்றால், தண்ணீரில் உள்ள உப்பு கரை டயில்ஸில் படிந்து அழுக்காக தெரியும். இதை நீக்க அதிகமாக பணம் செலவு செய்து சந்தைகளில் விற்கப்படும் சில பொருட்களை வாங்கி உபயோகிப்போம்.
ஆனால், இதனால் எந்த பயனும் நமக்கு கிடைக்காது. சில ரூபாய் செலவில் உங்கள் முழு பாத்ரூமையும் பளிச்சென்றும், நறுமணத்துடவும் வைக்கலாம் என்பது உங்களுக்கு தெரியுமா?. ஆமாம்.. உண்மைதான். பாத்ரூமில் படிந்துள்ள உப்புக்கரைகளை எளிமையாக நீக்குவதற்கான சில உதவிக் குறிப்புகளை இந்த பதிவில் நீங்கள் முழுமையாக பார்க்கலாம் வாங்க…
பாத்ரூமை பளிச்சென்று மாற்ற இதை பயன்படுத்துங்கள்:
தேயிலை மர எண்ணெய்:
தேயிலை மர எண்ணெய் குளியலறையை சுத்தம் செய்வதற்கான சிறந்த ஒரு பொருளாகும்.
ஆம் குளியறையில் உள்ள பாக்டீரியா மற்றும் பூஞ்சை காளான் போன்றவற்றை அளிக்க இந்த தேயிலை மர எண்ணெய் மிகவும் பயன்படும்.
நீங்கள் முதலில்தேயிலை மர எண்ணெயை தண்ணீருடன் கலந்து நீர்த்துப்போகச் செய்து, பின்பு அதனை ஒரு பாட்டிலில் ஊற்றி, குளியலறையில் பயன்படுத்துவதால் இதனை இயற்கையான கிருமிநாசினி ஸ்ப்ரேயை பயன்படுத்தலாம்.
அழுக்கு படிந்த பாத்ரூமை சுத்தம் செய்ய பேக்கிங் சோடா மட்டும் போதுங்க..!
உங்கள் குளியலறையில் ஈரப்பதம் மற்றும் பூஞ்சை உருவாகும் வாய்ப்பு இருப்பதால் தேயிலை மர எண்ணெயை கொண்டு குளியலறை சுவர்களை துடைப்பதன் மூலம், சுவர்களில் படிந்துள்ள கறைகள் நீங்கி பளிச்சென்று இருக்கும். பிற்காலங்களில் கறைகள் ஏற்படாமல் தடுக்கும்.
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |