தேங்காய்பால் முறுக்கு
தீபாவளி நெருங்கி வரும் வேளையில், புதுப்புது பலகார வகைகளை செய்து நமது உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் வழங்குவது நமது பண்பாடு. அனைத்து வருடமும் ஒரே மாதிரியான பலகாரங்கள் தயாரித்து நமக்கு அலுத்துப்போய் இருக்கும். தீபாவளி என்றாலே முறுக்கு தான் ஞாபகத்திற்கு வரும். முறுக்கில் பல வகைகள் உள்ளது. நாம் எல்லா வகைகளையும் ருசித்து இருக்க மாட்டோம்.
முறுக்கு ஒரு சிறந்த ஆரோக்கியமான சிற்றுண்டி ஆகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த மொறு மொறு முறுக்கு தீபாவளியின் ஒரு அங்கம். தீபாவளி மட்டுமல்ல மாலை நேர சிற்றுண்டிக்கு சிறந்ததாக விளங்கும். முறுக்கில் பலவகைகள் உள்ளது. அவற்றில் ஒன்றான தேங்காய்பால் முறுக்கு எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்ப்போம். அனைத்து வருடம் போல் இல்லாமல் இந்த வருடம் புது முயற்சியாக தேங்காய்பால் முறுக்கு செய்து அனைவருக்கும் வழங்கி சந்தோசம் அடையுங்கள். வாருங்கள் பதிவிற்கு செல்லலாம்.
தேங்காய்ப்பால் முறுக்கு செய்வது எப்படி ?
தேவையான பொருட்கள்:
முறுக்கு மாவு – 2 கப்
எள் – 2 டீஸ்பூன்
வெண்ணெய் – 1 1/2 தேக்கரண்டி
உப்பு – தேவைக்கேற்ப
பெருங்காய தூள் – 1 டீஸ்பூன்
கெட்டியான தேங்காய் பால் – 1/2 கப்
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை :
ஒரு பாத்திரத்தில் முறுக்கு மாவுடன் எள்ளு, தேவையான அளவு உப்பு, பெருங்காத்தூள் ஆகியவற்றை கலந்து நன்றாக கிளறி கொள்ளவும்.
பின்னர் சிறிதளவு வெண்ணெய் சேர்த்து மாவை பிசைந்து கொள்ளவும். அதனுடன் சிறிது சிறிதாக தேங்காய்ப்பால் சேர்த்து மாவை மென்மையாக பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
பின்னர் முறுக்கு மேக்கரில் சேர்த்து முறுக்கை ஒரு சிறிய தட்டில் பிழிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.
இப்போது ஒரு கடாயில் எண்ணெயை சூடாக்கி அதில் பிழிந்து வைத்துள்ள முறுக்கை போட்டு பொன்னிறமாக மாறும் வரை வறுக்கவும்.
இருபுறமும் பொன்னிறமாக மாறிய பின்னர் கடாயில் இருந்து எண்ணையை வடிகட்டி எடுக்கவும்.
இப்போது மொறு மொறுபான தேங்காய் பால் முறுக்கு ரெடி.
இந்த வருட தீபாவளிக்கு மொறு மொறுபான தேங்காய் பால் முறுக்கு செய்து தீபாவளியை கொண்டாடுங்கள்.
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
மேலும் இது போன்ற டிப்ஸினை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் | Tips |