தஞ்சாவூர் ஸ்பெஷல் தேங்காய் தெரட்டிப்பால் அருமையான பாரம்பரிய சுவையில் …

thengai therattupal recipe in tamil

தேங்காய் தெரட்டிப்பால் 

பொதுவாக தீபாவளி என்றால் ஞாபகம் வருவது புது ஆடைகள், மத்தாப்புகள், பலகாரங்கள் தான். பலகாரம் என்றால் முறுக்கு தான் நினைவு வரும். பலவகை பலகாரம் இருந்தாலும் முறுக்கு முதன்மை. சிலருக்கு நிறைய பலகாரம் செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அதனை எப்படி செய்வது என்று தெரியாமலே இருக்கும். அந்த வகையில் ஒரு சிலருக்கு தெரட்டிப்பால் மிகவும் பிடித்த ஒரு ரெசிபியாக இருக்கும். ஆனால் அந்த தேங்காய் தெரட்டிப்பால் செய்ய என்னென்ன பொருட்கள் வேண்டும் என்றும், எப்படி செய்ய வேண்டும் என்றும் தெரியாமல் இருக்கும். அந்த வகையில் இன்று தித்திக்கும் சுவையில் தஞ்சாவூர் ஸ்பெஷல் தேங்காய் தெரட்டிப்பால் செய்வது எப்படி என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

தேங்காய் தெரட்டிப்பால் செய்வது எப்படி ?

தேவையான பொருட்கள்:

தேங்காய் – 2 கப்
வெல்லம் – 2 கப் ( தூள்ளாக )
பச்சை அரிசி (அ)பாசி பருப்பு  – 1 தேக்கரண்டி ( 1/2 மணிநேரம் ஊற வைக்கவும்)
ஏலக்காய் – 5
நெய் – 1 தேக்கரண்டி
முந்திரி – 10

செய்முறை:

thengai therattupal recipe in tamil

முதலில் அரிசியை நன்றாக கழுவி, 1/2 மணிநேரம் ஊற வைத்து அரைத்துக்கொள்ளவும். அதனுடன் திருவி வைத்துள்ள தேங்காய் சேர்த்து அரைத்து கொள்ளவும்.

பின்னர் அடுப்பில் ஒரு கனமான பாத்திரத்தை வைத்து அதில் தூளாக்கி வைத்துள்ள சர்க்கரை சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி பாகு போல் காய்ச்சி கொள்ளவும்.

பின்னர் அந்த பாகில் அரைத்து வைத்துள்ள அரிசி மற்றும் தேங்காய் கலவையை சேர்த்துக்கொள்ளவும்.

thengai therattupal recipe

அதனுடன் ஏலக்காய் மற்றும் நெய் சேர்த்து நன்றாக திரண்டுவரும் வரை கிளறவும். பாத்திரத்தில் ஒட்டாதவாறு கிளறிக்கொண்டே இருக்கவும்.

மாற்ற ஒரு பாத்திரத்தில் நெய்யை நன்றாக சூடாக்கி அதில் முந்திரியை வறுத்து தெரட்டிப்பாலுடன் கலக்கவும்.

thengai therattupal

இப்போது சுவையான தித்திக்கும் திகட்டாத தஞ்சாவூர் தெரட்டிப்பால் தயார்.

அவ்வளவு தாங்க தஞ்சாவூர் தெரட்டிப்பால் இப்படி தான் செய்யணும். நீங்களும் உங்க வீட்டுல ட்ரை பண்ணி டேஸ்ட் எப்படி இருக்குனு பாருங்க.

அனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்!!!