தேங்காய் பூ செய்வது எப்படி.?
பெண்கள் சமைப்பதற்கு கூட கஷ்ட பட மாட்டார்கள். ஆனால் வெங்காயம் உரிப்பதற்கும், தேங்காய் திருகுவதற்கும் ரொம்ப அலுப்புப்படுவார்கள். தேங்காய் யாராவது திருகி கொடுத்தால் நல்லா இருக்கும் என்று நினைப்பார்கள். தேங்காய் திருகுவதை எல்லாருமே கஷ்டமாக தான் நினைப்பார்கள். அவர்களுக்கான அருமையான டிப்ஸை தான் பார்க்க போகிறோம். தேங்காய் திருகுவதற்கு இனிமேல் கஷ்ட பட வேண்டாம். யாரிடமும் தேங்காயை மட்டும் திருகி கொடுங்கள் என்று கேட்கவும் வேண்டாம். இந்த பதிவை முழுமையாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
இதையும் படியுங்கள் ⇒ சமையலறையில் உள்ள வெள்ளை கறை படிந்த உப்பு கறைகளை இப்படி நீக்குங்கள்
தேங்காய் திருக ஈஸியான வழிமுறை:
ஸ்டேப்:1
முதலில் தேங்காயை இரண்டாக உடைத்து கொள்ளுங்கள். பின் இரண்டு மூடியையும் தண்ணீரில் நனைத்து கொள்ளுங்கள். பின் அடுப்பை பற்ற வையுங்கள். அதில் இட்லி பாத்திரத்தை வைத்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றுங்கள்.
ஸ்டேப்:2
தண்ணீர் சூடானதும் இட்லி தட்டை வையுங்கள். அதில் உடைத்த இரண்டு தேங்காய் மூடியையும் வையுங்கள். ஒரு 2 நிமிடம் அப்படியே வேக வையுங்கள். பிறகு அடுப்பை அனைத்து விடுங்கள்.
ஸ்டேப்:3
பின் இட்லி பாத்திரத்தில் இருந்து தேங்காய் மூடியை எடுத்து கத்தி அல்லது கரண்டியை பயன்படுத்தி தேங்காயை மட்டும் எடுங்கள். பிறகு எடுத்த தேங்காயை சிறியதாக நறுக்கி கொள்ளவும்.
ஸ்டேப்:4
பின் நறுக்கிய தேங்காயை மிக்சி ஜாரில் சேர்த்து தண்ணீர் இல்லாமல் அரைக்கவும். ரொம்ப நேரம் மிக்சியை ஓட விடக்கூடாது. ரொம்ப நேரம் ஓட விட்டால் பேஸ்ட்டாக மாறிவிடும்.
ஸ்டேப்:5
மேல் கூறப்பட்டுள்ளது போல் செய்வதனால் தேங்காய் பூவும் கிடைத்து விடும். இன்னொன்று தேங்காய் கெட்டு போகாது. மேல் கூறப்பட்டுள்ள குறிப்பை இட்லி தட்டில் தான் செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை குக்கரிலும் செய்யலாம். குக்கரில் செய்யும் போது விசில் போட கூடாது.
தேங்காய் இல்லாமல் குழம்பு வைத்து விடலாமா..! இல்லையென்றால் யாராவது தேங்காய் திருகி கொடுப்பார்களா என்று இனி யோசிக்க வேண்டியதில்லை. நீங்களே சமைக்கும் போது தேங்காய் திருகி சமைத்துவிடுவீர்கள். உங்கள் வீட்டில் தேங்காய் இல்லாமல் சமைக்கவே மாட்டீர்கள்.
ஒரு முறை மேல் கூறப்பட்டுள்ள குறிப்பை பயன்படுத்தி பாருங்கள்..! உங்களுக்கு Ok -வாக இருந்தால் தொடர்ந்து இந்த குறிப்பை பயன்படுத்துங்கள். உங்களின் நண்பர்களும் தேங்காய் திருக கஷ்டப்படுகிறார்கள் என்றால் இந்த பதிவை Share செய்யுங்கள். பயனுள்ளதாக இருக்கும்.
மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | www.pothunalam.com |