வீட்டிலேயே சுவையான கெட்டி தயிர் இது போல செய்து பாருங்கள்..!

thick curd at home in tamil

கெட்டி தயிர் செய்வது எப்படி.?

வணக்கம் நண்பர்களே..! கடையில்  வாங்கும் தயிர் போல வீட்டிலேயே எப்படி செய்வது என்று தெரிந்துகொள்வோம். வீட்டில் உள்ள பாலை வைத்து தயிர் உரை வைக்கும் போது கெட்டியான பதம் வராது. நிறைய நண்பர்களுக்கு சாப்பிட்டவுடன் கடைசியாக தயிர் போட்டு சாப்பிடும் பழக்கம் இருக்கும். சில நபர்கள் தயிரை குடிப்பார்கள். அந்த தயிர் கெட்டியாக இருந்தால் தான் பிடிக்கும். கடையில் விற்கும் தயிர் போல் கெட்டியாகவும், ருசியாகவும் வீட்டிலேயே செய்யலாம் எப்படி என்று தெரிந்துகொள்வோம் வாங்க..

கெட்டி தயிர் செய்ய தேவையான பொருட்கள்:

  • பால் -1/4 லிட்டர்
  • கான்பிளவர் மாவு – 2 தேக்கரண்டி

கெட்டி தயிர் செய்முறை:

கெட்டி தயிர் செய்வது எப்படி

ஸ்டேப்:1

முதலில் தயிருக்கு தேவையான பாலை எடுத்து கொள்ளுங்கள். அந்த பாலை நன்கு காய்த்து கொள்ளுங்கள். பின் காய்த்த  பாலை ஆற விட வேண்டும்.

ஸ்டேப்:2

பால் ஆறியதும் 2 தேக்கரண்டி தயிர் பாலில் சேருங்கள். பின் அதனுடன் 1 தேக்கரண்டி கான்பிளவர் மாவை தயிருடன் சேர்த்து கலந்து விடுங்கள். நல்லா பேஸ்ட்டாக வரும் வரை கலக்கவும்.

ஸ்டேப்:3

பின் காலிபிளவர் சேர்த்த பிறகு காய்த்த  பால் 1/4 டம்ளர் எடுத்து அதில் சேர்க்கவும். இரண்டும் மிக்ஸ் ஆகும்படி கலக்கவும். பின்னர் மூடி வைக்கவும். மேல் கூறப்பட்டுள்ள குறிப்பை நீங்கள் செய்த 5 மணி நேரத்தில் கெட்டியான தயிர் கிடைத்துவிடும்.

ஸ்டேப்:4

உதாரணமாக நீங்கள் காலையில் 9 மணிக்கு செய்து வைக்கிறீர்கள் என்றால் 2 மணிக்கு எல்லாம் கெட்டியான தயிர் கிடைத்து விடும்.

ஸ்டேப்:5

கான்பிளவர் மாவு சேர்ப்பதால் ருசியாக இருக்காதோ என்ற அச்சம் வேண்டாம்.சுவை சிறிதளவு கூட மாறாது. நீங்கள் எப்பொழுதும் செய்யும் தயிர் போல் தான் இருக்கும். ஆனால் கெட்டியாக இருக்கும்.

ஸ்டேப்:6

நீங்கள் சில்வர் பாத்திரத்தில் செய்வதை விட மண் பானையில் செய்தால் நன்றாக இருக்கும். நம் முன்னோர்கள் எல்லாம் உணவு எல்லாமே மண் பானையில் தான் சமைத்தார்கள். அதனால் தான் அவர்கள் எந்த நோயும் இல்லாமல் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். இப்போது அப்டியே சில்வர், அலுமினியம், நான்ஸ்டிக் போன்ற பாத்திரங்களில் சமைக்கிறார்கள். மண் பானையில் சமைக்கும் போது சுவை அள்ளுவதோடு ஆரோக்கியத்திற்கும் நல்லது.

ஸ்டேப்:7

மண் பானையில் தயிர் உறை ஊற்றும் போது சரியான அளவில் புளிக்கும். தயிரில் இருக்கும் தண்ணீரை மண் பானை உறிந்துவிடும். அதுமட்டுமில்லாமல் தயிர் ருசியாகவும் இருக்கும்.

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com