Manjal Karai Neenga Tips in Tamil
நாம் பார்த்து பார்த்து வாங்கும் துணிகள் எத்தனை நாளைக்கு அப்படியே இருக்கும் என்று தான் தெரியாது. ஏனென்றால் என்ன தான் நாம் துணிகளை நல்ல முறையில் பராமரித்து வந்தாலும் கூட அவற்றில் ஏதேனும் கறைகள் என்பது வந்து கொண்டு தான் உள்ளது. அந்த வகையில் துணிகளில் இருக்கும் சாதாரணமான அழுக்குகளை எல்லாம் நாம் நீக்கி விடலாம். ஆனால் மஞ்சள் கறை, கருப்பு கறை மற்றும் புள்ளி புள்ளியாக உள்ள கறை என இவற்றை எல்லாம் எத்தனை மணி நேரம் தேய்த்தாலும் கூட நீக்கவே முடியாது என்பது தான் பலரது புலம்பலாக இருக்கிறது.
ஆனால் இனி உங்களுக்கு இந்த மாதிரியான புலம்பல்கள் எதுவும் இருக்காது. ஏனென்றால் இன்றைய பதிவின் கறைகளில் ஒன்றாக காணப்படும் மஞ்சள் கறையினை எவ்வாறு எளிய முறையில் சுத்தம் செய்வது என்பதை தான் பார்க்கப்போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
துணிகளில் மஞ்சள் கறை நீங்க:
டிப்ஸ்- 1
வெள்ளை துணிகளில் மஞ்சள் கறை இருந்தால் அதனை சுத்தம் செய்வதற்கு மிகவும் கடினமாக இருக்கும். ஆகையால் 1 ஸ்பூன் எலுமிச்சை சாற்றை எடுத்துக்கொண்டு மஞ்சள் கறை இருக்கும் இடத்தில் நன்றாக தடவி 1/2 மணி நேரம் அப்படியே ஊற வைத்து விடுங்கள்.
1/2 மணி நேரம் கழித்து வழக்கமாக பயன்படுத்தும் துணி சோப்பினை பயன்படுத்தி ஒருமுறை அழுத்தி தேய்த்து துவைத்தால் பளிச்சென்று மாறிவிடும்.
டிப்ஸ்- 2
- துவைக்கும் பவுடர்- 1 ஸ்பூன்
- வெள்ளை வினிகர்- 1 ஸ்பூன்
- தண்ணீர்- 1/2 லிட்டர்
முதலில் ஒரு வாளியை எடுத்துக்கொண்டு அதில் துணி துவைக்கும் பவுடர் மற்றும் வெள்ளை வினிகரை சேர்த்து கொண்டு பின்பு அதனுடன் 1/2 லிட்டர் தண்ணீரை சேர்த்து 2 நிமிடம் வரை கலந்து விடுங்கள்.
2 நிமிட கழித்து கறை படிந்துள்ள துணிகளை அதில் சேர்த்து நன்றாக ஊற வைத்து அதன் பிறகு வழக்கம் போல துவைத்து விட்டால் போதும் மஞ்சள் கறை நீங்கி விடும்.
டிப்ஸ்- 3
இவற்றை எல்லாம் நீங்கள் செய்தாலும் கூட மஞ்சள் கறை பட்டவுடன் அந்த இடத்தில் சாதாரணமான தண்ணீரை கொண்டு லேசாக துடைத்தாலே போதும் லேசாக கறை மறைந்து விடும்.
அதன் பிறகு நீங்கள் வழக்கமாக துவைக்கும் போதே முறையில் துவைத்தால் கறை எளிமையாக நீங்கி விடும்.
துணிகள் சரியாக காயாமல் துர்நாற்றம் வீசுகிறதா
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |