துணிகளில் கறை நீங்க
பொதுவாக பெண்களுக்கு துணி துவைப்பது கஸ்டமான வேலையாக இருக்கிறது. சாதாரணமாக துணி துவைப்பதே கஷ்டமான வேலையாக இருக்கிறது. இதில் விடாப்பிடியான கறைகள் படிந்த துணியை துவைப்பது என்பது சொல்லவே வேண்டாம். புது துணிகளில் அழுக்கு படிந்தால் ஏதவாது செய்து அந்த கறையை நீக்க வேண்டும் என்று தான் நினைப்போம். அதனால் தான் இந்த பதிவில் துணிகளில் படிந்துள்ள கறைகளை நீக்குவதற்கான வழிகளை பற்றி தெரிந்து கொள்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
துணிகளில் உள்ள கறையை நீக்க:
எலுமிச்சை மற்றும் உப்பு:
ஒரு கிண்ணத்தில் சிறிதளவு உப்பு, சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொள்ளவும். இதனை கறை உள்ள இடத்தில் அப்ளை செய்து 1/2 மணி நேரம் வைத்திருக்க வேண்டும். அதன் பிறகு வெந்நீரை பயன்படுத்தி துணியை துவைக்க வேண்டும். கரை உள்ள இடத்தில் பிரஷை பயன்படுத்தி தேய்த்தாலே கறைகள் நீங்கி விடும்.
நிமிடத்தில் வெள்ளை சட்டையில் உள்ள கறைகள் நீங்கி பளிச்சுன்னு இருக்கணுமா.!
பேக்கிங் சோடா மற்றும் துணி துவைக்கும் பவுடர்:
ஒரு கிண்ணத்தில் பேஸ்ட் சோடா 2 தேக்கரண்டி சேர்த்து பேஸ்ட்டாக கலந்து கொள்ளவும். அதன் பிறகு கறை படிந்துள்ள இடத்தில் கலந்து வைத்துள்ள பேஸ்ட்டை அப்ளை செய்ய வேண்டும். இவை அப்படியே 30 நிமிடத்திற்கு இருக்க வேண்டும். 30 நிமிடம் கழித்து கறை படிந்துள்ள இடத்தில் பிரஷை பயன்படுத்தி தேய்த்தாலே துணிகளில் உள்ள கறைகள் நீங்கி விடும்.
பேக்கிங் சோடா மற்றும் வினிகர்:
ஒரு இடத்தில் கறைகள் இருந்தால் மேல் கூறியுள்ள குறிப்பை பயன்படுத்தி அழுக்கை நீக்கி விடலாம். அதுவே துணி முழுவதும் கறையாக இருந்தால் துணியை தூக்கி தான் போடுவோம். அதனால் இந்த பதிவில் துணி முழுவதும் கறையாக இருந்தால்கூட இந்த குறிப்பை பயன்படுத்தி கறையை நீக்கி விடலாம். அவை எப்படி என்று அறிந்து கொள்வோம்.
ஒரு பக்கெட்டில் பேக்கிங் சோடா மற்றும் வினிகர் சேர்த்து கலந்து கொள்ளவும். இதில் கறை உள்ள துணியை 30 நிமிடத்திற்கு ஊற விடவும். 30 நிமிடம் கழித்து துணியில் நீங்கள் எப்பொழுதும் பயன்படுத்தும் சோப்பை பயன்படுத்தி துவைத்தாலே கறைகள் எல்லாம் நீங்கி துணி பளபளவென்று ஆகிவிடும்.
பிசுபிசுப்பான கேஸ் பர்னர் நிமிசத்தில் புதியது போல் மாற்ற இத Try பண்ணிப்பாருங்க…
மேலும் இது போன்ற டிப்ஸினை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் | Tips |