துணியில் கரை எடுப்பது எப்படி.? | Thuni Karai Poga Tips in Tamil
சில நேரங்களில் நாம் அன்றாட போட்டுக்கொள்ளும் உடைகளில் எதாவது விடாப்பிடியான கறைகளை பட்டுவிடும். அதனை அகற்றுவதற்கும் போதும் போதுமென ஆகிவிடும். என்னதான் விலை உயர்ந்த டிடர்ஜென்ட் பவுடர்கள் வாங்கி உபயோகித்தாலும் இந்த மாதிரியான விடாப்பிடியான கறைகளை நீக்கும் சக்தி அதற்கு இருப்பதில்லை. நீங்கள் பிரஷ் வைத்து அதிகம் தேய்த்தால் துணி தான் பாழாகி போய்விடும். அதனை வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே மிக எளிதாக எப்படி நீக்கி மீண்டும் புத்தம் புதிய ஆடையை போல் மாற்றுவது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.
Thuniyil Karai Poga Tips in Tamil | வெள்ளை சட்டையில் கரை எடுப்பது எப்படி.?
சில சமயங்களில் சாயம் போகும் துணியுடன் அனைத்து துணியையும் ஊறவைத்திருப்போம். இதன் காரணமாக அவற்றில் உள்ள சாயம் மற்ற துணிகள் மீதும் பட்டுவிடும். அதனை அகற்ற கீழ் உள்ள டிப்ஸை பாலோ பண்ணுங்கள்.
தேவையான பொருட்கள்:
- வினிகர்
- பேக்கிங் சோடா
- துணிப்பவுடர்
செய்முறை:
- துணியில் கறை போக ஒரு பாக்கெட்டை எடுத்துக்கொள்ளுங்கள் அவற்றில் கறை பட்ட துணி முழுகும் அளவிற்கு தண்ணீரை நிரப்பிக்கொள்ளுங்கள்.
- பின் அவற்றில் இரண்டு ஸ்பூன் வினிகர், இரண்டு ஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் ஒரு ஸ்பூன் துணி பவுடர் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
- பின் கறை உள்ள துணை அவற்றில் நன்கு 1/2 மணி நிறம் வரை ஊறவைக்க வேண்டும்.
- பின்பு அதனை எப்பொழுது போல கசக்கி துவைத்தால் போதும் அவற்றில் உள்ள சாயம் நீங்கிவிடும்.
விடாப்பிடியான கறை போக:
துணியில் ரொம்ப விடாப்பிடியான கறைகள் பட்டுவிட்ட அவற்றை அகற்ற சிரமம்பட வேண்டாம். உதாரணத்திற்கு பேனாவின் இங்கு கறை, ரத்தம் கறை, குழம்பு கறை இது போன்ற கறைகளை அகற்ற கீழ் உள்ள டிப்ஸை ட்ரை செய்துபாருங்கள் .
தேவையான பொருட்கள்:
- வினிகர் – தேவையான அளவு
- பழைய பல் துலக்கும் பிரஸ் – ஒன்று
- குளியல் சோப் (ஹமாம் சோப்பாக இருந்தால் மிகவும் சிறந்தது)
செய்முறை:
விடாப்பிடியான கறை உள்ள துணியை எடுத்துக்கொள்ளுங்கள் வினிகரை கறை உள்ள குடத்தில் நன்றாக ஊற்றிவிடுங்கள். பின் டூத் பிரஷை பயன்படுத்தி கறையை நன்றாக தேய்க்க வேண்டும். இரண்டு முறை இந்த முறையை செய்யுங்கள். பின் குளியல் சோப்பை பயன்படுத்தி கறையுள்ள இடத்தில் தேய்த்து துவையுங்கள். இவ்வாறு செய்தலே விடாப்பிடயன கறைகள் அனைத்தும் அகன்றுவிடும்.
வாழை கறை போக டிப்ஸ்:
பொதுவாக வாழை கரை துணிகளில் பட்டுவிட்டது என்றால் அதனை அகற்றுவது என்பது மிகவும் கடினமாகும். இருந்தாலும் நீங்கள் வாழை கறை உள்ள இடத்தில் சிறிதளவு பெட்ரோல் ஊற்றி பழைய டூத் பிரஷை பயன்படுத்தி நன்றாக தேய்த்துவிடுங்கள். இவ்வாறு தேய்ப்பதினால் வாழை கறை அகன்றுவிடும். பிறகு துணி சோப்பை பயன்படுத்தி துணை நன்றாக துவைத்திவிடுங்கள்.
இந்த மூன்று டிப்ஸையும் ஒருமுறை ட்ரை செய்து பாருங்கள்.. பயனுள்ளதாக இருக்கும். இந்த பதிவை முழுமையாக படித்தமைக்கு மிக மகிழ்ச்சி.. நன்றி வணக்கம்..
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் Today Useful Information In Tamil புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tips in Tamil |