பாத்ரூம் கறைகளை நீக்க
நமது ஆரோக்கியம் நமது உணவில் மட்டும் இல்லைநாம் பயன்படுத்தும் பாத்ரூமிலும் தன இருக்கிறது. நமது வீடு எவ்வளவு சுத்தமாக உள்ளதோ அதை போல் நமது பாத்ரூமையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். காரணம் நோய் கிருமிகள் அங்கு இருந்து தான் பரவ ஆரம்பிக்கும். அதனால் அதனை எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். குளியல் அறையில் படிந்து இருக்கும் உப்பு கரைகளை நீக்கினால் பாத்ரூம் சுத்தமாக இருக்கும் என என்னும் பலருக்கும் அதற்கான தீர்வு தெரிவது இல்லை. பாத்ரூமில் படிந்து இருக்கும் விடாப்பிடியான கறைகளை நாம் பல மணி நேரம் உழைத்தாலும் அது போவது என்னும் உங்களுக்காக தான் இந்த பதிவு. எளிமையான முறையில் பாத்ரூமில் படிந்து இருக்கும் உப்பு கறைகளை போக்குவது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். வாருங்கள் இன்றைய பதிவிற்கு செல்லலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
பாத்ரூமில் படிந்து இருக்கும் விடாப்பிடி கறையை நீக்க :
குளியலறைகளில் இருக்கும் உப்பு நீர் கறைகளை அகற்ற நீங்கள் வீட்டில் பயன்படுத்தும் வினிகர் போதுமானது.
வினிகர் அமில தன்மை கொண்டது அதனால் அவற்றை கடினமான கறைகளை அகற்ற பயன்படுத்தலாம்.
வெள்ளை வினிகர் குளியலறையில் உள்ள கிருமிகள், பூஞ்சைகளை அளிக்க கூடியது.
பயன்படுத்தும் முறை:
Tips 1:
பாத்திரம் தேய்க்கும் லிக்விட் உடன் சிறு துளி எலுமிச்சை சாறு மற்றும் சமையல் சோடா சேர்த்து நன்றாக கலந்து அதனை உப்பு படிந்துள்ள இடங்களில் தெளித்து விட்டு, சிறிது நேரங்களுக்கு பிறகு அதனை சலவை தூள் தெளித்து அதனை தேய்த்தால் உப்பு படிந்துள்ள டைல்ஸ் பளிச் என்று மாறிவிடும்.
வாஷ்பேஷன், சிங்க் போன்ற இடங்களில் விடாப்பிடி மற்றும் துர்நாற்றத்திற்கு, அந்த இடத்தில் சுடு நீருடன் எலுமிச்சை சாறு கலந்து துவாரத்தில் ஊற்றினால் அடைப்புகள் நீங்கி, துர்நாற்றம் வீசுவது தடுக்கப்படும்.
Tips 2:
வினிகரை சம அளவு தண்ணீரில் கலந்து கரைசலை உருவாக்கி கொள்ளவும். பின்னர் அதனை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் சேமித்து, அதனை உங்கள் வீட்டில் படிந்துள்ள உப்பு நீரால் ஏற்பட்ட விடாப்பிடி கறைகளின் மீது தெளித்து சிறிது நேரங்களுக்கு பிறகு நீங்கள் பேக்கிங் சோடாவை கொண்டுமற்றும் சலவை சேர்த்து அந்த கறைகளை தேய்த்தால் கறைகள் நீங்கி பளிச் என்ற நிறத்தை தரும்.
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |