Tiles Cleaning Liquid At Home
வாசகர்களே வணக்கம்..! பெரும்பாலும் இன்றைய நிலையில் அனைத்து இடங்களிலுமே பெண்கள் வேலை செய்கிறார்கள். அதாவது பெண்கள் வேலை செய்யாத துறைகளே கிடையாது. அனைத்து துறைகளிலும் பெண்கள் ஆண்களுக்கு சமமாக இருக்கிறார்கள். பெண்கள் எல்லா இடங்களிலும் வேலை செய்தாலும் வீட்டில் வேலை செய்வது என்றால் கொஞ்சம் பயமாகத் தான் இருக்கும். உண்மை தான் வெளியில் செய்யும் வேலைகளை விட வீட்டில் வேலைகள் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும்.
அப்படி வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகள் செய்யும் வேலைகளில் தரையை சுத்தம் செய்வதும் ஓன்று. சிமெண்ட் தரையாக இருந்தால் தேய்த்து கழுவி விடலாம். அதுவே டைல்ஸ் தரையாக இருந்தால் என்ன செய்வது. டைல்ஸ் தரையை எவ்வளவு தான் தேய்த்தாலும் பளிச்சென்று மாறவில்லையே என்று கவலைப்படுபவரா நீங்கள்..! அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான். வாங்க நண்பர்களே அழுக்கு படிந்த டைல்ஸ் தரையை எப்படி பளிச்சென்று மாற்றுவது என்று தெரிந்து கொள்வோம்.
Tiles Cleaning Liquid At Home in Tamil:
ஸ்டேப் -1
முதலில் அந்துருண்டை 6 அல்லது உங்களுக்கு தேவையான அளவு எடுத்து கொள்ள வேண்டும். பின் அந்த அந்துருண்டையை தூளாக நுனிக்கி எடுத்து கொள்ள வேண்டும்.
ஸ்டேப் -2
அடுத்து ஒரு பாத்திரத்தில் 4 கப் அளவிற்கு நீரை கொதிக்க வைத்து ஊற்ற வேண்டும். பின் அதில் நாம் நுனிக்கி வைத்துள்ள அந்துருண்டை தூளை சேர்த்து கலந்து விட வேண்டும்.
உங்க வீட்டு பாத்ரூம் கதவுகளில் உள்ள உப்பு கறையை போக்க இனிமேல் கஷ்டப்பட வேண்டாம் இதை மட்டும் ஒருமுறை ட்ரை பண்ணுங்க போதும் |
ஸ்டேப் -3
பின் அதில் ஒரு கப் அளவிற்கு வினிகரை சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். அடுத்து அதில் 5 ஸ்பூன் அளவிற்கு பாத்திரம் கழுவும் லிக்விடை சேர்த்து கொள்ளவும்.
ஸ்டேப் -4
அதேபோல துணி துவைக்க பயன்படுத்தும் லிக்விடையும் 5 ஸ்பூன் அளவிற்கு சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். பின் அதில் 4 கப் அளவிற்கு வெதுவெதுப்பான தண்ணீரை ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.
அவ்வளவு தான் இப்பொழுது லிக்விடு ரெடி. இதை ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்து கொள்ளுங்கள். இந்த லிக்விடை ஊற்றி டைல்ஸை துடைத்தால் டைல்ஸ் பளிச்சென்று மாறிவிடும்.
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> உங்கள் வீட்டு பாத்ரூமில் உள்ள அனைத்து உப்புக்கறைகளையும் நீங்க இதை ட்ரை பண்ணுங்க
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |