Tips and Tricks To Preserve Tomatoes For Months
அனைத்து விதமான சமையலிலும் தக்காளி பயன்படுத்தப்படுவதால் தக்காளியை நாம் அதிகமாக தான் வாங்கி வருவோம். ஆனால் தக்காளி ஒரு சில நாட்களிலேயே அழுக தொடங்கிவிடும். அதுமட்டுமில்லாமல் ஒரு சில நாட்களில் தக்காளியின் விலை அதிகரித்து கொண்டே இருக்கும். இதனால் குறைவாக இருக்கம் போதே அளவுக்கு அதிகமான தக்காளியை வாங்கி வந்து வீட்டில் வைத்து விடுவோம். வாங்கி வந்து வைத்தால் மட்டும் போதுமா.? அதனை மாதக்கணக்கில் கெடாமல் வைத்திருக்க என்ன செய்ய வேண்டும்.? என்பதை தெரிந்து கொள்ள வேண்டாமா.? எனவே மாதக்கணக்கில் தக்காளியை கெடாமல் வைத்திருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை இப்பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
தக்காளி மாதக்கணக்கில் கெடாமல் இருக்க டிப்ஸ்:
தக்காளியை கடையில் இருந்து வாங்கி வந்ததும் அதனை முதலில் தண்ணீர் ஊற்றி கழுவி ஈரப்பதம் இல்லாதவாறு நன்கு துடைத்து எடுக்க வேண்டும்.
வேண்டுமென்றால் ஃபேனில் சிறிது நேரம் வைத்து தக்காளியில் தண்ணீர் இல்லாமல் உலர்த்தி எடுத்து கொள்ளுங்கள்.
முதலில் தக்காளியை வாங்கி வந்ததும் அதனை மூன்று வகையாக பிரித்து வைக்க வேண்டும். அதாவது, உடைந்த தக்காளி அல்லது நசுங்கிய தக்காளியை தனியாகவும், நன்கு பழுத்து இருக்கும் தக்காளியை தனியாகவும் மற்றும் லேசாக பழுத்த உள்ள தக்காளியை தனியாகவும் பிரித்து வைக்க வேண்டும்.
அதன் பிறகு, நசுங்கிய நிலையில் உள்ள தக்காளியை 2 நாட்களுக்குள் பயன்டுத்த தனியாக எடுத்து வைத்து கொள்ளுங்கள்.
இப்போது, ஒரு அகலமான பெரிய பிளாஸ்டிக் டப்பாவை எடுத்து கொள்ளுங்கள். அதில் ஒரு டிஸ்யூ பேப்பர் அல்லது நியூஸ் பேப்பரை வைத்து கொள்ளுங்கள்.
மாதக்கணக்கில் வெங்காயம் அழுகாமல் இருக்க இந்த டிப்ஸை மட்டும் Follow பண்ணுங்க..!
அடுத்து இந்த டிஸ்யூ பேப்பரின் மீது, மீதமுள்ள லேசாக பழுத்து இருக்கும் தக்காளியை வரிசையாக வைத்து கொள்ளுங்கள்.
பின், அதற்கு மேல் ஒரு டிஸ்யூ பேப்பரை வைத்து நன்கு பழுத்த நிலையில் உள்ள தக்காளியை நல்ல இடைவெளி விட்டு வைத்து விடுங்கள்.
அடுத்து இதன் மேல் ஒரு டிஸ்யூ பேப்பரை வைத்து பிளாஸ்டிக் டப்பாவினை நன்கு மூடி வைத்து விடுங்கள்.
இவ்வாறு சேமித்து வைத்தால் தக்காளி மாதக்கணக்கில் தக்காளி கெடாமல் இருக்கும்.
மேலும் இது போன்ற டிப்ஸினை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் | Tips |