உங்க வீட்டு பைப்புகளில் நீண்ட நாட்களாக உள்ள கறைகளையும் இந்த ஒரு பொருளை வைத்து வெறும் 5 நிமிடத்தில் சட்டுனு போக்கிவிடலாம்..!

Advertisement

Tips for Bathroom Pipe Cleaning in Tamil

நாம் அனைவருமே மிகவும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்றால் அதற்கு நாம் வாழும் இடங்கள் மற்றும் நமது சுற்றுப்புறங்களையும் மிகவும் சுத்தமாக பராமரித்து கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக நாம் வாழும் வீட்டினை மிக மிக கவனமாக சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். ஏனென்றால் இங்கு தான் நாம் அதிக நேரத்தை செலவழிக்கின்றோம். அதிலும் குறிப்பாக நமது வீட்டின் பாத்ரூம் மற்றும் கிட்சன் பகுதியை மிகவும் சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். ஏனென்றால் இங்கு தான் அதிக அளவு அசுத்தங்கள் சேரும். அதனால் தான் இன்றைய பதிவில் பாத்ரூம் மற்றும் கிட்சன் பகுதியில் உள்ள பைப்புகளில் நீண்ட நாட்களாக படிந்துள்ள கறைகளை போக்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள குறிப்பினை பயன்படுத்தி பயன் பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl 

How to Clean Bathroom Pipes in Tamil:

How to Clean Bathroom Pipes in Tamil

பாத்ரூம் மற்றும் கிட்சன் பகுதியில் உள்ள பைப்புகளில் நீண்ட நாட்களாக விடாப்பிடியாக படிந்துள்ள கறைகளை வெறும் 5 நிமிடத்தில் போக்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக இங்கு காணலாம்.

அதற்கு தேவையான பொருட்களை பற்றி முதலில் பார்க்கலாம்.

  1. எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்
  2. சலவை தூள் – 2 டேபிள் ஸ்பூன்
  3. பேக்கிங் சோடா – 2 டேபிள் ஸ்பூன்
  4. தண்ணீர் – 2 டேபிள் ஸ்பூன்

நீண்ட நாட்களாக பாத்ரூம் கதவுகளில் படிந்துள்ள உப்பு கறைகளை வெறும் 10 நிமிடத்தில் போக்கிவிடலாம்

கிண்ணத்தை எடுத்து கொள்ளுங்கள்:

முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 2 டேபிள் ஸ்பூன் சலவை தூள் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

பேக்கிங் சோடாவை கலந்து கொள்ளுங்கள்:

அடுத்து அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 2 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவை கலந்து கொள்ளுங்கள்.

உங்கள் வீட்டு பாத்ரூமில் உள்ள அனைத்து உப்புக்கறைகளையும் நீங்க இதை ட்ரை பண்ணுங்க

தண்ணீரை கலக்கவும்:

இப்பொழுது அதில் 2 டேபிள் ஸ்பூன் தண்ணீரை கலந்து நன்கு பசை போல் மாற்றி கொள்ளுங்கள். பின்னர் அதனை உங்கள் வீட்டின் பாத்ரூம் மற்றும் கிட்சன் பகுதியில் உள்ள பைப்புகளின் மீது தடவி 10 முதல் 15 நிமிடங்கள் வைத்து கொள்ளுங்கள்.

பின்னர் 10 முதல் 15 நிமிடங்கள் கழித்து அதனை லேசாக தேய்த்து தண்ணீர் ஊற்றி கழுவினீர்கள் என்றால் அந்த பைப்புகளில் இருந்த அனைத்து கறைகளும் சட்டுன்னு நீங்கி விடும்.

உங்கள் வீட்டு பாத்ரூம் சுத்தமாகவும் வாசனையாகவும் இருக்க வேண்டுமா அப்போ இதை மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil
Advertisement