காலை நேரத்தை அழகாக்க
உங்களின் அழகான காலை பொழுதை உங்களால் ரசிக்க முடியவில்லையா காரணம் தொடர்ந்துள்ள வேலைகள் நேரமின்மை. பரபரப்பான காலை நேரங்கள் உங்களுக்கு, சில நேரங்களில் மன அழுத்தத்தையும் தரும். இதனால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். பரபரப்பான சூழலில் குழந்தைகளுக்கு நம்மால் நேரத்தை ஒதுக்க முடியாது. அவர்கள் கேட்டும் கேள்விகளுக்கும் பதில் அளிக்க முடியாது. அதனால் அவர்களை திட்டிவிடுவோம். அதனால் அவர்கள் அழுவார்கள் அதுவும் உங்களின் மனதை பாதிக்கும். இப்படி ஒவ்வொரு வீட்டிலும் காலை பொழுது பரபரப்பாக இருக்கும். சில நேரங்களில் அந்த நேரங்களில் வெளிப்படுத்தும் வார்த்தைகள் குடும்பத்தில் விரிசலையும் ஏற்படுத்தும். இதில் இருந்து மீள சில குறிப்புகள் உங்களுக்காக. வாருங்கள் பதிவிற்கு செல்லலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
காலை நேர பரபரப்பு குறைக்க என்ன செய்யலாம்:
முதல் நாள் இரவு :
உங்கள் வார தொடக்கத்தில் பரபரப்பு இல்லாமல் இருக்க ஞாயிற்றுக்கிழமை இரவே அந்த வாரத்திற்கான திட்டமிடலை தொடங்குங்கள். அடுத்த நாள் காலை நீங்கள் செய்ய வேண்டிய வேலைகளை பட்டியலிடுங்கள். அவற்றுக்கு நீங்கள் கடைபிடிக்க வேண்டிய நேரத்தை கணக்கீடுங்கள். உங்கள் வேலைகளை ஒரு தாளில் எழுதி சரிபார்த்துக்கொள்ளுங்கள்.
உறக்கம்:
உங்களின் இரவு நிம்மதியாக இருந்தால் அடுத்தநாள் சுறுசுறுப்பானதாக இருக்கும். இரவில் முன்னரே தூங்குவது நல்லது. அப்படி செய்வதால் காலையில் முன்னரே உங்கள் பணிகளை தொடங்க முடியும். அதனால் பரபரப்பு குறையும். வேலைகள் முன்கூட்டியே முடிக்க முடியும்.
திட்டமிடல்:
முதல் நாள் இரவே, அடுத்த நாளுக்கான திட்டமிடலை தொடங்குங்கள்.
அடுத்த நாள் அணிய வேண்டிய உடைகள், பள்ளி செல்லும் குழந்தைகள் எடுத்து செல்ல வேண்டிய பொருட்கள் என அனைத்தையும் இரவே சரி பார்க்க வேண்டும்.
அடுத்த நாள் சமையலை திட்டமிட வேண்டும். சமையலை பொறுத்தவரை நாளை சமைக்க போகும் பொருட்கள்
உள்ளதா அவற்றில் முன் ஏற்பாடாக இப்போது அதாவது செய்து வைக்க வேண்டுமா ? என்பவனவற்றை யோசித்து செயல்பட வேண்டும்.
காய்களிகளை வெட்டிவைப்பது. கடலைகளை ஊறவைப்பது, சப்பாத்தி பூரிக்கான மாவுகளை தயார் செய்வது போன்றவை.
குழந்தைகளுக்கு பயிற்சி:
பள்ளி செல்லும் குழந்தைகள் தங்களின் தேவைகளை தங்களை நிறைவேற்றிக்கொள்ள பயிற்சி தருவது சிறந்தது. இவ்வாறு செய்வதால் அவர்கள் நாங்கள் சில தேவைகளை தங்களை செய்துகொள்வார்கள். அவற்றால் உங்களின் நேரம் மிச்சப்படும்.
ஒழுகுபடுத்துதல்:
காலை நேரங்களில் ஒரு பொருளை தேட நாம் அதிக நேரம் செலவிடுவோம். இது அன்றைய நாளை மிகவும் மோசமானதாக மாற்றும். அதனால் வீட்டில் இருக்கும் அனைத்துப்பொருட்களையும் சரியான இடத்தில் வைப்பதை கடைபிடிக்க வேண்டும். அதனால் உங்கள் தேடல் குறையும், அன்றைய நாள் சிறந்ததாக இருக்கும்.
ஆரோக்கியம் :
காலை பரபரப்பில் சாப்பிடாமல் இருப்பது தவறு. இது ஆரோக்கியத்தை கெடுக்கும் உங்களின் நாள் சோர்வாக மாறிவிடும்.
மேலும் இது போன்ற டிப்ஸினை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் | Tips |