Kitchen Tips in Tamil
பொதுவாக பாத்திரம் விளக்குவது என்பதே மிகவும் கஷ்டமான ஒரு வேலை. ஆனால் இதை விடவும் கஷ்டமான வேலை என்று ஒன்று இருக்கிறது. அந்த வேலை அடிப்பிடித்த பாத்திரத்தை விளக்குவது தான். எத்தனை பேருக்கு சமைக்க சொன்னாலும் சமைத்து விடலாம். ஆனால் சமைத்த முடித்த பிறகு பாத்திரங்களை விளக்குதல் என்பது அவ்வளவு எளிதல்ல. அதுவும் இட்லி பாத்திரம், வறுவல் செய்த பாத்திரம் மற்றும் அடிப்பிடித்த தோசைக்கல் என்றால் சொல்லவே வேண்டாம். அதனை பளிச்சென்று சுத்தம் செய்வதற்குள் பாதி நேரம் போகிவிடும். இனி நீங்கள் இதுமாதிரி கஷ்டப்பட வேண்டாம். வெறும் 1 ஸ்பூன் ஜெல் போதும் பாத்திரங்கள் அனைத்தும் 5 நிமிடத்திற்குள் சுத்தம் செய்வது பற்றி இன்றைய பதிவை முழுவதுமாக படித்து தெரிந்துக்கொண்டு. உங்களுடைய வீட்டிலும் இந்த ட்ரிக்ஸை Follow பண்ணலாம் வாங்க..!
இதையும் படியுங்கள்⇒ இந்த பவுடரை Use பண்ணா போதும் பாத்ரூமில் பூச்சிகள் மற்றும் துர்நாற்றம் வராமலும் இருக்கும்..!
அடிப்பிடித்த பாத்திரம் கழுவுவது எப்படி..?
அடிப்பிடித்த பாத்திரங்களை சுத்தம் செய்வதற்கு இரண்டு வகையான டிப்ஸ் பற்றி விரிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
தேவையான பொருட்கள்:
- எலுமிச்சை பழம்- 3
- கல் உப்பு- 2 ஸ்பூன்
- சமையல் சோடா- 2 ஸ்பூன்
- துணி துவைக்கும் சவுகாரம்- 1
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே:
👉 https://bit.ly/3Bfc0Gl
ஜெல் தயாரிக்கும் முறை:
முதலில் ஒரு துணி துவைக்கும் சவுக்கரத்தை எடுத்துக்கொண்டு அதனை தூள் தூளாக செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு 3 எலுமிச்சை பழத்தை எடுத்துக்கொண்டு அதனை இரண்டாக வெட்டி அதிலிருந்து சாறு பிழிந்து ஒரு பாத்திரத்தில் வைத்து கொள்ளுங்கள்.
இப்போது 2 ஸ்பூன் கல் உப்பு மற்றும் 2 ஸ்பூன் சமையல் சோடா எடுத்துக்கொண்டு அதனை எலுமிச்சை சாறு இருக்கும் பாத்திரத்தில் போட்டு விடுங்கள்.
அடுத்ததாக அடுப்பை பற்ற வைத்து அதில் 2 டம்ளர் சூடு தண்ணீர் போட்டு கொள்ளுங்கள். தண்ணீர் நன்றாக கொதித்தவுடன் அடுப்பை அணைத்து விட்டு. அந்த சூடு தண்ணீரை எலுமிச்சை சாறு உள்ள பாத்திரத்தில் ஊற்றி ஒரு கரண்டியால் கிண்டி விட்டு 10 நிமிடம் ஆற விடுங்கள்.
10 நிமிடம் கழித்த பிறகு நீங்கள் தயார் செய்த அந்த ஜெல்லால் அடிப்பிடித்த பாத்திரத்தை சுத்தம் செய்யுங்கள். பாத்திரத்துமும் பளபளக்கும் உங்களுக்கு கை வலியும் இருக்காது.
இதையும் படியுங்கள்⇒ வீட்டை சுத்தம் செய்வதற்கு இந்த டிப்ஸ் மட்டும் ட்ரை பண்ணுங்க நீங்களே ஆச்சரியப்படுவீர்கள் ..!
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |