Tips For Cooking Without The Pan Sticking in Tamil
பொதுவாக வீட்டில் நாம் சமைக்க ஆரம்பித்தால் ஏதாவது ஒரு பிரச்சனையை சமையல் அறையில் செய்வது வழக்கம்..! அப்படி என்ன செய்வோம் என்றால், அடுப்பில் பாலை பொங்க விடுவது அல்லது ஏதாவது வறுவல் செய்தால் அதனை கருகவிடுவது என இதுபோல் ஏதாவது ஒரு பிரச்சனையை செய்வது ஒரு வழக்கமாக வைத்திருப்போம். இப்படி செய்வதால் அதனை கழுவும் போது நாம் தான் அதிகம் கஷ்டப்படுவோம். இதனை ஈசியாக துலக்குவதற்கு நிறைய டிப்ஸ் இருந்தாலும் அதனை சரியாக சமைத்தால் நமக்கு இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படாது. ஆகவே பாத்திரம் அடிப்பிக்காமல் சமைப்பது எப்படி என்று பார்க்கலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
பால் பொங்கவிடாமல் பார்த்துக்கொள்வது:
பால் கொதிக்கவிடும் போது அதனை நாம் எப்போதும் கீழ் ஊற்றாமல் பார்த்துக்கொள்வது எப்படி..? அதற்கு அதன் பக்கத்தில் இருந்தால் போதும் என்று சொல்வீர்கள். ஆனால் அப்படி இல்லை பால் கொதிக்கவிடவும் போது பாலை ஊற்றி கொதிக்கும் முறை வைத்து அடுப்பை மீடியத்தில் வைத்தால் பால் நன்கு கொதிக்கும். அதன் பின்பு சிறிது நேரம் கழித்து அடுப்பை அணைத்து விடலாம். இப்படி செய்வதால் பால் நன்கு காய்ந்துவிடும் கீழும் ஊற்றாது.
கருகிப்போன பால் பாத்திரத்தை புதியபோல பளபளக்க வைக்க இதை செய்யுங்க
பொரியல் கருகாமல் எப்படி சமைப்பது:
நண்பர்களே எப்படி செய்தாலும் கருகிவிட்டது என்கிறீர்களா..? அதற்கு நாம் பொரியல் செய்யும் போது முதலில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு போடுவோம். அது கருகாமல் அதன் பின்பு எதை பொரியல் செய்வீர்களோ அதனை சேர்த்து அப்போது அடுப்பை மிதமான தீயில் வைக்கவேண்டும். எண்ணெய் கொதிக்கும் நிலையில் இருந்தால் அதனை தொடர்ந்து கிண்டிக்கொண்டு இருக்கவேண்டும். அப்படியே விட்டால் கடாய் கருகிவிடும் சமையலில் கருகிய வாடை ஏற்படும்.
குழம்பு கருகாமல் இருக்க:
எப்போதும் வீட்டில் நேத்தி வைத்த குழம்பை சூடு செய்வது வழக்கம். அதுபோல அதனை நாம் கருகி வைப்பதும் வழக்கம். அதனை கருக்கவிடாமல் சமைப்பது சூடு செய்வது எப்படி..? எப்போதும் மீதி குழம்பை சிறிய பாத்திரத்தில் வைப்பது வழக்கம். ஆனால் ஓரளவு பெரிய பாத்திரத்தில் வைத்து சூடுபடுத்த வேண்டும். அதேபோல் அதனை மிதமான தீயில் வைத்த கிண்டிக்கொண்டு இருக்கவேண்டும். அதன் பின்பு மிகவும் கெட்டியாக இருந்தால் அதில் கொஞ்சம் தண்ணீர் உப்பு சேர்த்து சூடுபடுத்த வைக்கவேண்டும். இப்படி செய்தால் பாத்திரம் அடிபிடிக்காது.
அடி பிடித்த பாத்திரத்தை கஷ்டப்பட்டு தேய்க்க வேண்டாம்
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |