Tips for Floor and Wall Cleaning in Tamil
இன்றைய காலகட்டத்தில் அனைவருக்குமே ஏதாவது ஒரு உடல்நல பிரச்சனை ஏற்படுகிறது. அதற்கு காரணம் நமது சுற்றுசூழல் மாசுபாடு தான். அதனால் தான் நாம முன்னோர்கள் நமக்கு நாம் வாழும் இடங்கள் மற்றும் நமது சுற்றுப்புறங்களையும் மிகவும் சுத்தமாக பராமரித்து கொள்ள வேண்டும் என்று சொல்லி கொடுத்துள்ளார்கள். அதிலும் குறிப்பாக நமது வாழும் வீட்டினை மிக சுத்தமாக பராமரித்து கொள்ள வேண்டும். ஏனென்றால் இங்கு தான் நாம் அதிக நேரத்தை செலவழிக்கின்றோம். அதனால் தான் இன்றைய பதிவில் நமது வீட்டின் தரை மற்றும் சுவரில் படிந்துள்ள அனைத்து கறைகளையும் போக்க உதவும் மிக எளிமையான ஒரு குறிப்பினை பற்றி விரிவாக காண போகின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள குறிப்பினை பயன்படுத்தி மிகவும் எளிமையான முறையில் உங்கள் வீட்டின் தரை மற்றும் சுவரினை கிளீன் செய்து கொள்ளுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl |
How to Deep Clean Wall and Floor Tiles in Tamil:
வீட்டில் உள்ள தரைகள் மற்றும் சுவர்களில் அதிக அளவு கறைகள் படிந்திருக்கும். அதிலும் குறிப்பாக குழந்தைகள் உள்ள வீட்டின் நிலைமையை சொல்லவே வேண்டாம்.
அவர்கள் தங்கள் கண்களில் படும் இடத்தில் எல்லாம் பென்சில், பேனா ஆகியவற்றை வைத்து கிறுக்கி வைத்துவிடுவார்கள். அதனை சுத்தம் செய்வதற்குள் நமதுபாடு பாடாத பாடாகிவிடும்.
அதனால் அவற்றை எல்லாம் மிகவும் எளிமையான முறையில் சுத்தம் செய்வதற்கு உதவும் ஒரு குறிப்பினை பற்றி இங்கு காணலாம் வாங்க
அதற்கு முன்னால் இந்த குறிப்பிற்கு தேவையான பொருட்களை பற்றி முதலில் பார்க்கலாம்.
- பேக்கிங் சோடா – 1 டேபிள் ஸ்பூன்
- எலுமிச்சை பழம் – 1
- பல்துலக்கும் பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்
- வினிகர் – 1 டேபிள் ஸ்பூன்
கிண்ணத்தை எடுத்து கொள்ளவும்:
முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள அதில் 1 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் 1 எலுமிச்சை பழத்தின் சாற்றினை மட்டும் பிழிந்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
பல்துலக்கும் பேஸ்ட்டை கலக்கவும்:
பிறகு அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 1 டேபிள் ஸ்பூன் பல்துலக்கும் பேஸ்ட்டையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
நீண்ட நாட்களாக பாத்ரூம் கதவுகளில் படிந்துள்ள உப்பு கறைகளை வெறும் 10 நிமிடத்தில் போக்கிவிடலாம்
வினிகரை கலந்து கொள்ளவும்:
இறுதியாக அதனுடன் 1 டேபிள் ஸ்பூன் பல்துலக்கும் வினிகரையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். பின்னர் இதை உங்கள் வீட்டின் தரை மற்றும் சுவரில் தெளித்து 30 நிமிடங்கள் கழித்து தரையை மாப் பயன்படுத்தியும், சுவரை ஏதாவது பழைய துணியை பயன்படுத்தியும் துடைத்து கொள்ளுங்கள்.
இப்படி செய்வதன் மூலம் உங்கள் வீட்டின் சுவர் மற்றும் தரையில் உள்ள கறைகள் அனைத்தும் நீங்கிவிடுவதை நீங்களே காணலாம்.
பாத்ரூமை இதை விட யாரும் ஈஸியா கிளீன் செய்ய முடியாது
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |