துணி மடிப்பது எப்படி.? | Tips for Folding Clothes in Tamil
துணி மடிப்பது கஷ்டமான வேலையாக இருக்கும். அதுவும் மடித்த துணிகளில் இருந்து ஒரு துணி எடுக்கும் போது மடித்து வைத்த எல்லா துணிகளும் கலைந்து விடும். அதுமட்டுமில்லாமல் துணிகளை அடுக்கி வைத்திருக்கும் செல்ப் ஆக இருந்தாலும் சரி, பீரோவாக இருந்தாலும் சரி அழகாக இருக்க வேண்டும் என்று தான் நினைப்போம். அதனால் நீங்கள் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியது போல் துணியை மடித்து வையுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
T-shirt :
டீசர்ட்டை நேராக முதலில் போட்டு கை பக்கம் இரண்டையும் உள்பக்கம் வைத்து மடித்து, இரண்டு பக்கம் உடம்பையும் உள்பக்கம் வைத்து மடிக்கவும். கழுத்து பகுதியிலுருந்து கொஞ்சம் கொஞ்சமாக வைத்து முழுவதும் மடிக்கவும். கடைசி பகுதி உள்ள மடிப்பை கழுத்து பகுதியின் ஓட்டையில் உள்ளே விடவும். இப்படி மடித்து வைத்தால் எப்படி தூக்கி போட்டாலும் கலையாது.
Jeans Pant:
பேண்டை இரண்டு பக்க கால் பகுதியையும் ஒன்றாக மடிக்கவும். கால் பகுதியிலுருந்து வைத்து மடக்கி, இடுப்பு பகுதி வந்ததும் காலிலிருந்து மடக்கி வந்த கடைசி பகுதியை இடுப்பின் ஓட்டையில் உள்ளே விடவும்.
இதையும் படியுங்கள் ⇒ கிரைண்டரில் உளுந்து மாவு நிறைய வருவது முதல் ஹீட் ஆவதை சரி செய்ய இதை ட்ரை பண்ணுங்க..!
Nighty:
நைட்டியை இரண்டாக மடித்து, மூன்றாக மடிக்கவும். அடுத்து கீழ் பக்கத்திலிருந்து மேல் பக்கம் வரை மடித்து கடைசி பகுதி மடிக்கும் போது, ஒரு பாக்கெட் போல வரும். அந்த பாக்கெட்டில் உள்ளே கடைசி பகுதியை விடவும்.
Pant & Shirt:
சட்டையை பிரட்டி போட்டு கையின் இரண்டு பகுதியையும் Opposite Direction -னில் வைக்கவும். அடுத்து ஷோல்டேரில் தையல் பகுதி வரைக்கும் இரண்டு பகுதியையும் மடிக்கவும். அடுத்து கீழ் பக்கத்திலிருந்து ஒரே மடிப்பாக மடிக்கவும்.
பேண்ட் இரண்டு கால் பகுதியையும் சேர்த்து மடித்து, அதன் நடு பகுதியில் மடித்து வைத்த சட்டையை வைத்து கால் பகுதியிலுருந்து இரண்டு மடக்கு மடக்கி இடுப்பு பகுதியை ஒரே மடக்காக மடக்கி அந்த ஓட்டையில் கால் பகுதி மடித்ததை உள்ளே விட வேண்டும்.
Saree:
நீங்கள் எப்பொழுதும் புடவை மடிப்பது போல முதலில் 2 மடித்து, 4 மடித்து மற்றும் 8 என்று மடிப்பீர்கள் அல்லவா, அதே போல் மடித்து அடிப்பகுதியிலிருந்து கடைசி பகுதி வரைக்கும் மடித்து வந்து இடைவெளி இருக்கும் அந்த இடைவெளியில் உள்ளே விடவும்.
மேல் கூறப்பட்டுள்ளது போல் துணியை மடித்து பாருங்கள்.
இதையும் படியுங்கள் ⇒ பீரோவில் இப்படி துணியை அடுக்கி வைத்தால் 10 நபரின் துணிகளை கூட வைக்கலாம்..!
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | Tips in Tamil |