நைட் தூங்குவதற்கு ரொம்ப கஷ்டப்படுறீங்களா? அப்ப இந்த டீயை குடிங்க!

Advertisement

படுத்தவுடன் தூக்கம் வர என்ன செய்ய வேண்டும் | Tips for Good Sleep in Tamil

இன்றிய காலகட்டத்தில் பலருக்கும் இருக்கும் பிரச்சனை படுத்தவுடன் தூக்கம் வரல என்று மிகவும் கவலை கொள்கின்றன. மனிதனுக்கு உணவு மற்றும் காற்று எவ்வளவு முக்கியமானதோ அதேபோல் தான் தூக்கமும். ஒருவருக்கு சரியான தூக்கம் இல்லை என்றால் அன்றைய நாள் சிறந்த நாளாகவே இருக்காது. ஒவ்வொரு மனிதனுக்கும் தினமும் 8 மணி நேரம் தூக்கம் என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். தினமும் போதுமான அளவு நன்றாக தூங்கி எழுந்தால் மட்டுமே உடலும், உள்ளமும் ஆரோக்கியமாக இருக்கும். ஆனால் இன்று மாறிவரக்கூடிய வாழ்கை முறை, அதிக மன அழுத்தம், தவறான உணவு பழக்கம், அதிக வேலைப்பளு போன்ற பல காரணங்களினால் பலரும் தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்படுகின்றன. அதில் பலர் தூக்கமாத்திரையை பயன்படுத்தி தான் இரவில் தூங்கவே செய்கின்றன.

இது போன்ற சூழ்நிலைகளை தவிர்க்கவும், இயற்க்கையான முறையில் நாம் நன்கு தூங்க அருமையான வழியை பற்றி தான் இன்றைய பதிவில் பார்க்க உள்ளோம். அதாவது இரவில் தூங்க மிகவும் சிரமப்படுபவர்கள் இங்கு கூறப்பட்டிருக்கும் இரண்டு வகையான டீயில் ஏதாவது ஒன்றை தயார் செய்து தொடர்ந்து 7 நாட்கள் இரவு உறங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன் பருகி வந்தால் நல்ல தூக்கம் கிடைக்க வலிவாக்கும். 

தூக்கம் வர கொய்யாய் இலை டீ – Guava Leaf Tea Benefits in Tamil:Guava Leaf Tea

Tips for Good Sleep in Tamil – கொய்யாய் இலையை பறித்து சுத்தமாக கழிவியப்பிற்கு வெயில் ஒரு நாள் முழுவது காயவைத்து எடுத்துக்கொள்ளுங்கள். பிறகு சிறிதளவு காயவைத்த இலைகளை எடுத்து ஒரு கிளாஸ் நீரில் 5 முதல் 10 நிமிடம் கொதிக்கவைத்து வடிகட்டி தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன் பருகவும். இந்த டீயை தொடர்ந்து 7 நாட்கள் பருகிவர தூக்கம் இயற்கையாகவே வந்துவிடும்.

பயன்கள்:

சிலருக்கு இரவு தூங்க செல்லும் போது உடலில் சுகர் லெவல் அதிகமாகும். இந்த சுகர் லெவல் அதிகமானால் தூக்கம் என்பது பாதிக்கப்படும். ஆக இந்த கொய்யாய் இலை டீயில் உள்ள சில சத்துக்கள் நமது உடலில் சுகர் லெவல் அதிகமாகாமல் பார்த்துக்கொள்கிறது. மேலும் இந்த கொய்யாய் இலை டீ நமது உடல் வலியையும் போக்குகிறது. இந்த டீ நமது உடலில் ஏற்படக்கூடிய இரண்டு வகையான பிரச்சனைகளை சரி செய்வதினால் நமது உடலில் Relaxation Stage-க்கு அழைத்து செல்லும். இதனால் நீங்கள் இரவில் நிம்மதியாக தூங்கலாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ஒரு நிமிடத்தில் ஆழந்த தூக்கம் வர வேண்டுமா..? அப்போ இப்படி செய்யுங்க..!

வாழைப்பழம் மற்றும் வாழைப்பழ தோல் டீ – Banana and Banana Peel Tea:Banana and Banana Peel Tea

Tips for Good Sleep in Tamil – ஒரு வாழைப்பழத்தை பாதியாக கட் செய்து எடுத்துக்கொள்ளுங்கள், அந்த பாதி வாழைப்பழத்தை சிறு சிறு துண்டுகளை நறுக்கி, ஒரு கிளாஸ் தண்ணீர் 5 முதல் 10 நிமிடம் கொதிக்கவைக்கவும். பிறகு அதனை வடிகட்டி உறங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன் பருகவும்.

வாழைப்பழத்தை விட வாழைப்பழ தோளில் உள்ள மெக்னீசியம், பொட்டாசியம், Tryptophan என்கின்ற அமினோ ஆசிட் ஆகிய மூன்று நாம் தூங்குவதற்கு தேவைப்படும் மெலடோனை அதிகரிக்க உதவுகிறது. ஆக மேல் கூறப்பட்டுள்ள இரண்டில் ஏதாவது ஒன்றை இரவு உறங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன் தயார் செய்து தொடர்ந்து 7 நாட்கள் பருகவும் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
இரவில் நன்றாக தூக்கம் வர என்ன செய்ய வேண்டும்?

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Tamil maruthuvam tips
Advertisement