Tips for Tooth Cavity in Tamil
இன்றைய காலகட்டத்தில் சிறியவர் முதல் பெரியவர் அனைவருமே உணவு விஷயத்தில் அதிக கவனம் இல்லை. இதனால் தான் உங்களின் பற்களில் பல விதமான பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அப்படி பற்களில் ஏற்படும் பல விதமான பிரச்சனைகளில் ஒன்று தான் பற்களில் ஏற்படும் சொத்தை. அப்படி பற்களில் சொத்தை வந்து விட்டால் அதனால் ஏற்படும் வலியினை நம்மால் பொறுத்து கொள்ளவே முடியாது.
இந்த பிரச்சனை உங்களுக்கும் இருக்கிறது என்றால் இந்த பதிவு உங்களுக்கு தான். ஆம் நண்பர்களே இன்றைய பதிவில் பற்களில் உள்ள சொத்தையினை உங்கள் வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி இயற்கையான முறையில் போக்க உதவும் குறிப்பினை பற்றி தான் விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள குறிப்பினை பயன்படுத்தி உங்கள் பற்களில் உள்ள சொத்தையினை போக்கிகொள்ளுங்கள்.
இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> உங்களின் பற்களில் உள்ள சொத்தை நீங்க இதை மட்டும் செய்து பாருங்க
How to Remove Tooth Cavity at Home in Tamil:
உங்கள் வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி இயற்கையான முறையில் போக்க உதவும் குறிப்பினை பற்றி தான் விரிவாக காணலாம். முதலில் இதற்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.
- சீதாப்பழ இலை – 4
- பெருங்காயத்தூள் – 1 டீஸ்பூன்
- சுண்ணாம்பு – 1/2 டீஸ்பூன்
- கிராம்பு – 5
- உப்பு – 1 சிட்டிகை
- காட்டன் பந்து – 1
சீதாப்பழ இலையை எடுத்து கொள்ளவும்:
முதலில் நாம் எடுத்து வைத்துள்ள சீதாப்பழ இலையை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து எடுத்து கொள்ளுங்கள். பின்னர் அதனை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 5 கிராம்பினை சேர்த்து நன்கு அரைத்து அதில் உள்ள சாற்றினை மட்டும் ஒரு கிண்ணத்தில் வடிகட்டி கொள்ளுங்கள்.
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> பல்லில் உள்ள கறைகளை நீக்கி ஒரு நிமிடத்தில் பளிச்சென்று ஆக்கலாம்
பெருங்காயத்தூளினை சேர்க்கவும்:
பின்னர் நாம் வடிக்கட்டி வைத்துள்ள சாற்றுடன் நாம் எடுத்து வைத்துள்ள 1 டீஸ்பூன் பெருங்காயத்தூளினை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
சுண்ணாம்பினை கலக்கவும்:
அதனுடனே நாம் எடுத்து வைத்துள்ள 1/2 டீஸ்பூன் சுண்ணாம்பினை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
உப்பினை சேர்த்து கொள்ளவும்:
இறுதியாக அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 1 சிட்டிகை உப்பினை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். பின்னர் நாம் எடுத்து வைத்துள்ள 1 காட்டன் பந்தினை இதில் நனைத்து உங்களின் சொத்தை பற்களில் 10 – 15 நிமிடங்கள் வைத்து பின்னர் எடுத்து விடுங்கள்.
குறிப்பாக இதனை உங்களின் பற்களில் வைத்திருக்கும் பொழுது வரும் உமிழ் நீரினை கண்டிப்பாக விழுங்கி விடகூடாது. ஏனென்றால் அந்த உமிழ்நீரில் தான் சொத்தை பற்களில் இருக்கும் கிருமிகள் வெளியேறும்.
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> பல் ஈறு பலம் பெற
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | Tips in Tamil |