Tips to Avoid Cockroaches at Home
தினமும் நம்முடைய வீட்டை சுத்தம் செய்து பராமரித்து வைத்து இருப்போம். ஆனால் அதனை எப்படியாவது கெடுப்பதற்கு என்று பூச்சிகள் வீட்டிற்குள் வந்து நாசம் செய்து விட்டு சென்று விடும். அதுமட்டும் இல்லாமல் இத்தகைய பூச்சிகள் வீட்டின் மற்ற பகுதிகளை விட சமையல் அறையை தான் தலைகீழாக மாற்றிவிடுகின்றன. அதிலும் பெரும்பாலும் அனைத்து வீடுகளிலும் கரப்பான் பூச்சி தொல்லை தான் அதிகமாக காணப்டுகிறது. நீங்களும் கரப்பான் பூச்சி தொல்லையினை சரிசெய்வதற்கான எவ்வளவோ ட்ரை செய்து பார்த்து இருப்பீர்கள். ஆனால் அனைத்திலும் நீங்கள் முழுமையான பலனை எதிர்பார்த்து இருக்க முடியாது. ஆகவே வீட்டில் கரப்பான் பூச்சி தொல்லையை சரிசெய்வதற்கான டிப்ஸினை பற்றி தான் இன்றைய பதிவில் தெரிந்துக்கொண்டு இதனை மட்டும் ட்ரை செய்தால் போதும் நம்ம வீடா என்று நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
கரப்பான் பூச்சி வராமல் இருக்க:
டிப்ஸ்- 1
முதலில் ஒரு கிண்ணத்தில் வெள்ளை வினிகர் 1 தேக்கரண்டி எடுத்துக்கொண்டு அதனுடன் மிதமான சூட்டில் உள்ள சுடு தண்ணீரை கொஞ்சம் ஊற்றி கலந்து கொள்ளுங்கள்.
பின்பு அந்த தண்ணீரை இரவு தூங்க செல்வதற்கு முன்பு உங்களுடைய சமையல் அறையில் தெளித்து விட்டு அப்படியே விட்டு விடுங்கள். மறுநாள் காலையில் எழுந்து அந்த இடத்தை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து விடுங்கள்.
இதனை மட்டும் நீங்கள் செய்தால் போதும் உங்களுடைய கரப்பான் பூச்சி என்பதை கண்ணால் கூட நீங்கள் பார்க்க முடியாது.
இதையும் படியுங்கள்⇒ உங்கள் வீட்டில் கொசு அதிகமாக இருக்கா..! இதோ இயற்கையான முறையில் கொசுவை அழிப்பதற்கு வழிகள்
டிப்ஸ்- 2
போரிக் அமிலமானது ஒரு பூச்சிக்கொள்ளியாகவும் மற்றும் கிருமி நாசினியாகவும் பயன்படுகிறது. அதனால் போரிக் அமிலம் சிறிதளவு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு அதனுடன் 1 தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து 2 நிமிடம் நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
2 நிமிடம் கழித்த பிறகு அந்த தண்ணீரை கரப்பான் பூச்சி வரும் இடத்தில் தெளித்து விட்டால் போதும். இனி அந்த பக்கம் கரப்பான் பூச்சி வருவதை நாம் பார்க்கவே முடியாது. (குறிப்பு: போரிக் அமிலம் பயன்படுத்தும் போது கையினை உபயோகப்படுத்தக்கூடாது)
இதையும் படியுங்கள்⇒ வீட்டில் ஈ தொல்லை அதிகமாக இருக்கிறதா.! அப்போ இதை பண்ணுங்க ஒரு ஈ கூட வராது
டிப்ஸ்- 3
பேக்கிங் சோடா சமையல் அறை, பாத்ரூம் கறை, உப்பு கறை, மற்றும் பூச்சிகளை கொள்ள என நிறையவற்றிற்கு உபயோகப்படுத்தப்படுகிறது. ஆகவே ஒரு பவுலில் பேக்கிங் சோடா 1/2 தேக்கரண்டி மற்றும் 1 தேக்கரண்டி எலுமிச்சை பழச்சாறு எடுத்துக்கொண்டு கலந்து விடுங்கள்.
இப்போது அந்த தண்ணீரை உங்களுடைய வீட்டின் சமையல் அறை, சிங்க் மற்றும் பாத்ரூம் ஆகிய இடங்களில் தெளித்து விட்டு பின்பு 20 நிமிடம் கழித்து சுத்தம் செய்து விடுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் கரப்பான் பூச்சி தொல்லை அடியோடு நீங்கி விடும்.
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |