Tips To Clean Burnt Utensils in Tamil
பெண்களுக்கு வீட்டில் இருக்கும் பெரிய வேலைகளில் ஒன்று சமையல் பாத்திரங்களை கழுவுவது தான். தினமும் மூன்று வேலையும் சமைத்த பிறகு சமைத்த பாத்திரங்களை கழுவி சுத்தம் செய்வதற்கு போதும் போதும் என்றாகிவிடுகிறது. இதனால் ஒரு சில பெண்கள் வீட்டில் சமைப்பதையே தவிர்த்து விட்டு ஆன்லைன் மூலமாக உணவு ஆர்டர் செய்து சாப்பிடுவார்கள். இருந்தாலும் மூன்று வேலை உணவையும் அப்படி சாப்பிட முடியாது அல்லவா.. இதனால் பாத்திரம் கழுவும் வேலை என்றாலே வெறுப்பாகத்தான் இருக்கும். அதிலும் அடுப்பில் ஏதேனும் ஒரு பாத்திரத்தை வைத்து விட்டு உதாரணமாக பால் பாத்திரத்தை வைத்து விட்டு சிறிது நேரம் அதனை கவனிக்காமல் இருந்து விட்டால் அந்த பாத்திரத்தின் அடியில் அடிபிடித்து விடும். எனவே இதுபோன்ற பாத்திரங்களை எப்படி ஈசியாக தேய்த்து சுத்தம் செய்வது எப்படி என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
How To Clean Milk Burnt Steel Vessel in Tamil:
டிப்ஸ் -1
பாத்திரத்தில் அடிபிடித்துள்ளதை எளிதில் நீக்க வினிகர் மற்றும் பேக்கிங் சோடாவை பயன்படுத்தலாம்.
அதற்கு முதலில் அடிபிடித்த பாத்திரத்தை எடுத்து கொள்ளுங்கள். இதில் வினிகர் மற்றும் பேக்கிங் சோடா இவை இரண்டையும் சம அளவில் ஊற்றி 5 நிமிடம் வரை ஊறவைத்து விடுங்கள். அதன் பின் பாத்திரம் கழுவும் சோப்பு போட்டு நன்கு தேய்த்து சுத்தம் விட வேண்டும்.
இவ்வாறு செய்வதன் மூலம், அடிபிடித்த பாத்திரத்தை எளிதில் பளிச்சென்று மாற்றி விடலாம்.
டிப்ஸ் -2
பாத்திரத்தில் அடிபிடித்துள்ளதை எளிதில் நீக்க உப்பு, சூடான தண்ணீர் மற்றும் சோப்பை பயன்படுத்தலாம்.
அதற்கு முதலில் அடிபிடித்துள்ள பாத்திரத்தில் சூடான தண்ணீர், 2 ஸ்பூன் உப்பு மற்றும் சோப்பு அல்லது சோப்பு தூள் சேர்த்து 5 நிமிடம் ஊறவைக்க வேண்டும்.
அதன் பிறகு, ஸ்க்ரப்பரை கொண்டு தேய்த்து எடுத்தால் அடிபிடித்த பாத்திரம் பளிச்சென்று மாறிவிடும்.
டிப்ஸ் -3
பாத்திரத்தில் அடிபிடித்துள்ளதை எளிதில் நீக்க எலுமிச்சை பழம் மற்றும் சோப்பை பயன்படுத்தலாம்.
அதற்கு முதலில், அடிபிடித்துள்ள பாத்திரத்தில் எலுமிச்சை சாறு மற்றும் சோம்பு போட்டு 5 நிமிடம் வரை நன்கு ஊறவைக்க வேண்டும்.
அதன் பிறகு, ஸ்க்ரப்பரை கொண்டு தேய்த்து எடுத்தால் அடிபிடித்த பாத்திரம் பளிச்சென்று மாறிவிடும்.
பத்து வருட பித்தளை பாத்திரத்தையும் பளிச்சென்று மாற்ற இதை மட்டும் செய்யுங்கள்..!
மேலும் இது போன்ற டிப்ஸினை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் | Tips |