Tips To Clean Gas Stove in Tamil
வீட்டில் அதிகமாகவும் அடிக்கடியும் அழுக்காகுவது கிச்சன் தான். அதிலும், குறிப்பாக கேஸ் அடுப்பு தான் அடிக்கடி அழுக்காகவும் எண்ணெய் பிசுபிசுப்புடனும் இருக்கும். எனவே இதனை நாம் ஒவ்வொரு முறையும் சுத்தம் செய்ய மிகவும் சிரமப்படுகிறோம். முக்கியமாக அதிலுள்ள விடாப்பிடியான குழம்பு ஊற்றிய கறை போன்றவை எளிதில் அகற்ற முடியாது. எனவே இதனை எளிதில் அதாவது ஐந்தே நிமிடத்தில் எப்படி சுத்தம் செய்வது எப்படி என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Easy Way To Clean Gas Stove Top in Tamil:
முதலில் எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி அல்லது பயன்படுத்தி மீதமிருக்கு எலுமிச்சை பழத்தின் தோலை எடுத்து கொள்ளுங்கள்.
இப்போது, அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் தண்ணீர் ஊற்றி அதில் எலுமிச்சை பல தோல்களை போட்டு நன்கு கொதிக்க வைத்து கொள்ளுங்கள்.
நன்கு கொதித்ததும் அதனை வடிகட்டி சிறிது நேரம் ஆறவைத்து கொள்ளுங்கள். அதன் பிறகு, இதில் பேக்கிங் சோடா மற்றும் டிட்டர்ஜெண்ட் பவுடர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
வீட்டு பாத்ரூமுல பாசி புடிச்சு இருக்கா.! அத 5 நிமிஷத்துல நீக்கிடலாம்..
அதன் பிறகு, இந்த லிக்யூடை ஒரு பாட்டிலில் சேர்த்து கொள்ளுங்கள்.
இப்போது, அடுப்பை ஒரு ஈரத்துணி வைத்து துடைத்து விட்டு அதன் பிறகு, இந்த லிக்யூடை தெளித்து ஒரு ஸ்க்ரப்பர் கொண்டு நன்கு தேய்த்து விடுங்கள்.
அடுப்பு அதிக கறையாக இருந்தால் அதனை 5 நிமிடம் வரை ஊறவைத்து அதன் பிறகு ஸ்க்ரப்பர் கொண்டு தேய்த்து விடுங்கள்.
இறுதியாக தண்ணீர் கொண்டு அடுப்பை நன்கு துடைத்து விடுங்கள்.
இவ்வாறு செய்தால் அழுக்கு படிந்த கேஸ் அடுப்பு நிமிடத்தில் புத்தம் புதிதாக மாறிவிடும்.
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |