கண் கருவளையம் மறைய டிப்ஸ்
கண் என்றாலே ஆரோக்கியமாக இருந்தாலும் சரி அழகாக இருந்தாலும் சரி அதிக முக்கியத்துவம் கொடுப்பது இயல்பான ஒன்று. ஆனால் நாம் பார்த்து பார்த்து வைத்து இருக்கும் கண்களில் சில சமயம் கருவளையம் வந்து விடும். தான் சரி எப்படியாவது அந்த கருவளையத்தை சரி செய்தே ஆகா வேண்டும் என்பது பலருடைய ஆசையாக இருக்கும். உங்களுடைய ஆசையை பூர்த்தி செய்து கொள்வதற்கு இன்றைய பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதனால் இந்த பதிவை தொடர்ந்து படித்து ஒரே நாள் இரவில் கண்களை சுற்றியுள்ள கருவளையத்தை மறைய வைப்பதற்கான டிப்ஸினை தெரிந்துக்கொள்ளுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
Tips to Get Rid of Dark Circles:
தேங்காய் எண்ணெய்:
நாம் தினமும் பயன்படுத்தும் தேங்காய் எண்ணெயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் E இருப்பதால் இது கண்களில் உள்ள கருவளையத்திற்கு நல்ல தீர்வினை அளிக்கிறது.
அதனால் இரவு தூங்க செல்வதற்கு முன்பு தேங்காய் எண்ணெய் 2 சொட்டு கண்களில் உள்ள கருவளையத்தில் அப்ளை செய்தால் போதும் விரைவில் கருவளையம் மறைந்து விடும்.
2 நிமிடத்தில் உதடு கருமை நீங்கி சிவப்பாக இந்த டிப்ஸை ட்ரை பண்ணுங்க..!
எலுமிச்சை மற்றும் தக்காளி:
எலுமிச்சை மற்றும் தக்காளி இரண்டிலும் நோய் எதிர்ப்பு சக்தியினை எதிர்க்கும் பண்புகள் நிறைய இருக்கிறது.
அதனால் தக்காளியில் இருந்து 1 கப் சாறும் மற்றும் எலுமிச்சையில் இருந்து 1/2 கப் சாறும் தனியாக எடுத்து வைத்து கொள்ளுங்கள். பின்பு தக்காளி சாற்றில் 1/2 கப் எலுமிச்சை சாற்றினை ஊற்றி 5 நிமிடம் கலந்து கொள்ளுங்கள்.
5 நிமிடம் கழித்த பிறகு கண்ணை சுற்றி உள்ள கருவளையத்தில் அப்ளை செய்து 10 நிமிடம் அப்படியே வைத்து விட்டு. 10 நிமிடம் கழித்த பிறகு முகத்தை குளிர்ந்த நீரால் கழுவி விடுங்கள். இப்போது உங்களுடைய முகத்தை பாருங்கள் கருவளையம் எதுவும் இல்லாமல் முகம் அழகாக இருக்கும்.
பால்:
அன்றாட தேவைக்காக பயன்படுத்தப்படும் பாலில் லாக்டிக் அமிலமும் மற்றும் ஈரப்பத தன்மையும் இருக்கிறது. ஆகையால் 2 காட்டன் துணிகளை எடுத்துக்கொண்டு அதனை காய்ச்சாத பாலில் நனைத்து கண்ணை மூடிக்கொண்டு அதில் 10 நிமிடம் வைத்தால் போதும். கண்ணை சுற்றி இருக்கின்ற கருவளையம் காணாமல் போகிவிடும்.
நீங்கள் பாலை காய்ச்சாமல் இது மாதிரி வாரத்திற்கு 2 முறை செய்ய வேண்டும்.
இதையும் படியுங்கள்⇒ முகத்தில் உள்ள பருக்கள் மறைய 4 டிப்ஸ்
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | Tips in Tamil |