வாழைப்பழம் 1 வாரம் ஆனாலும் வீணாகாமல் இருக்க இதை மட்டும் ட்ரை பண்ணுங்க

Advertisement

வாழைப்பழம் வீணாகாமல் இருக்க 

ஹாய் நண்பர்களே..! இன்றைய பொதுநலம். காம் பதிவில் உங்கள் வீட்டில் ஒரு வாரம் ஆனாலும் வாழைப்பழம் வீணாகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதற்கான டிப்ஸை இன்றைய பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப்போகிறோம். பொதுவாக நம்முடைய வீட்டில் வாங்கும் வாழைப்பழத்தை உடனே யாரும் சாப்பிட்டு விடுவது இல்லை. மறுநாள் சாப்பிடலாம் என்று நினைக்கும் போது வாழைப்பழம் வீணாகிவிடும்.  நீங்கள் காசு கொடுத்து வாங்கிய வாழைப்பழம் சாப்பிட முடியாமல் வீணாகி விட்டது என்று நினைப்பீர்கள். இனி நீங்கள் இது மாதிரி நினைக்க வேண்டாம். வாழைப்பழம் வீணாகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்துகொள்ளலாம் வாங்க..!

இதையும் படியுங்கள்⇒ தினமும் 02 வாழைப்பழம் சாப்பிட்டால்..! என்ன                                       நன்மைகள் தருகிறது தெரியுமா?

வாழைப்பழம் வீணாகாமல் இருக்க டிப்ஸ்:

டிப்ஸ்- 1

உங்கள் வீட்டில் இருக்கும் வாழைப்பழம் வீணாகாமல் இருக்க 1 டம்ளர் தண்ணீரில் சிறிதளவு சோடா சேர்த்து கலந்து விடுங்கள். அதன் பிறகு கலந்த அந்த தண்ணீரில் வாழைப்பழத்தை நனைத்து வெளியே வைத்து விடுங்கள். இது மாதிரி செய்தால் வாழைப்பழம் வீணாகாமல் இருக்கும்.

டிப்ஸ்- 2

அடுத்ததாக சட்டை மாற்றுவதற்கு வைத்து இருக்கும் ஹெங்காரில் வாழைப்பழத்தை அதில் மாட்டி தொங்க விடுங்கள். இப்படி செய்தால் வாழைப்பழம் ஒரு வாரம் ஆனாலும் வீணாகாமல் அப்படியே இருக்கும்.

டிப்ஸ்- 3

காகிதம் அல்லது பிளாஸ்டிக் கவர் இதில் எதாவது ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு அந்த பேப்பரை வாழைப்பழத்தின் மேல் போட்டு மூடி விடுங்கள். இப்படி செய்தால் பிரிட்ஜ்ல் வைக்காமலேயே வாழைப்பழம் கெட்டு போகாமல் அப்படியே இருக்கும்.

டிப்ஸ்- 4

வாழைப்பழம் ஒரு வாரம் ஆனாலும் கெட்டு போகாமல் இருக்க உங்கள் வீட்டின் தரையில் சுத்தமான இடத்தில் கீழே ஒரு கனமான துணி அல்லது சணல் சாக்கு போட்டு அதன் மேலே வாழைப்பழத்தை வைத்து விடுங்கள். இது மாதிரி செய்யும் போது வாழைப்பழம் விரைவில் வீணாகாமல் இருக்கும்.

டிப்ஸ்- 5

வாழைப்பழம் வாங்கியவுடன் வீணாகாமல் இருக்கு ஒரு மெழுகு பேப்பரை எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு அந்த பேப்பரினால் வாழைப்பழத்தை மூடி விடுங்கள். இப்படி செய்தால் வாழைப்பழம் 2 வாரம் ஆனாலும் அப்படியே இருக்கும்.

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil
Advertisement