Tips to Preserve Tomatoes for Months in Tamil
பொதுவாக நாம் அனைவருமே நீண்ட நாட்களுக்கு ஆரோக்கியமாக உயிர்வாழ்வதற்கு மிக மிக முக்கியமானது என்றால் அது உணவு தான். அப்படி நமது வாழ்க்கைக்கு அத்தியாவசியமான உணவினை தயாரிக்க தேவையான பொருட்களை நாம் மிக மிக கவனமாக தேர்வு செய்து வாங்கி வைத்து கொள்வோம். ஆனாலும் அவை நீண்ட நாட்களுக்கு சேமித்து வைக்க முடியாது. அதிலும் குறிப்பாக காய்கறிகள் மற்றும் கீரை வகைகள் மிக மிக குறைந்து காலத்திற்கு மட்டுமே சேமித்து வைக்க முடியும். அவற்றை எல்லாம் நீண்ட நாட்களுக்கு சேமித்து வைக்க வேண்டும் என்று நினைப்போம் ஆனால் அது நம்மால் முடியாமல் போகும். அதனால் தான் இன்றைய பதிவில் நமது சமையலில் இன்றியமையாத ஒரு பொருளாக உள்ள தக்காளியை நீண்ட நாட்களுக்கு கெட்டுப்போகாமல் வைத்திருக்க உதவும் குறிப்பினை பற்றி விரிவாக காணலாம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
தக்காளி கெடாமல் இருக்க டிப்ஸ்:
டிப்ஸ் – 1
தக்காளியை கடையில் இருந்து வாங்கி வந்ததும் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் 1 டீஸ்பூன் மஞ்சள் தூள், 1 டீஸ்பூன் உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி நன்கு கழுவி ஈரப்பதம் இல்லாதவாறு துடைத்து எடுக்க வேண்டும்.
பின்னர் அதனின் காம்பு பகுதியில் செலோடேப்பை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி அதனின் மீது ஒட்டி கொள்ளுங்கள். இதனின் மூலம் தக்காளிக்குள் காற்று புகாது அதனால் தக்காளி நீண்டநாட்களுக்கு கெட்டுப்போகாது.
மாத கணக்கில் புதினா வாடி போகாமல் இருக்க இதை ட்ரை பண்ணுங்க
டிப்ஸ் – 2
தக்காளியை நன்கு சுத்தம் செய்து கொள்ளுங்கள். பின்னர் அதனின் மீது சிறிதளவு எண்ணெய்யை தடவி கொள்ளுங்கள். இதனின் மூலமும் தக்காளி நீண்டநாட்களுக்கு கெட்டுப்போகாமல் இருக்கும்.
டிப்ஸ் – 3
அடுத்து நாம் வாங்கி வைத்துள்ள தக்காளியை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி அதில் உள்ள விதை மற்றும் தோலை நீக்கிவிட்டு நறுக்கிய தக்காளியை பேக்கிங் தாளில் பேக்கிங் தாளில் வைக்கவும்.
கெட்டியாகும் வரை குளிர்சாதன உறைவிப்பானில் வைக்கவும். இதனின் மூலமும் தக்காளி நீண்டநாட்களுக்கு கெட்டுப்போகாமல் இருக்கும்.
மாதக்கணக்கில் தக்காளி அழுகாமல் இருக்க ஒரு டிஸ்யூ பேப்பர் மட்டும் போதும்
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |