Tips to Remove Rust from Vessels in Tamil
பொதுவாக நாம் வீட்டில் பயன்படுத்தும் அனைத்து பொருட்களையும் சுத்தம் செய்வது என்பது நமக்கு மிகவும் கடினமான ஒரு செயலாக இருக்கும். அதிலும் குறிப்பாக நாம் சமைக்க பயன்படுத்தும் பாத்திரங்களை சுத்தம் செய்வது தான் பலருக்கு மிக மிக கடினமான ஒரு வேலையாக இருக்கும். அதிலும் நாம் பயன்படுத்தும் பாத்திரங்களில் துரு பிடித்திருந்து அதை சரியாக சுத்தம் செய்யாமல் விட்டு விட்டோம் என்றால் அது நமது பாத்திரங்களை மிக விரைவில் பயன்படுத்தவே முடியாத அளவிற்கு செய்து விடும். அதனால் தான் இன்றைய பதிவில் உங்கள் வீட்டில் உள்ள சில பொருட்களை மட்டும் பயன்படுத்தி உங்கள் வீட்டு பாத்திரங்களில் படிந்துள்ள துருவையும் வெறும் 10 நிமிடத்தில் போக்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி தான் விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl |
How to Remove Rust from Vessels in Tamil:
உங்கள் வீட்டு பாத்திரங்களில் நீண்ட நாட்களாக படிந்துள்ள துருவையும் வெறும் 10 நிமிடத்தில் கை வைத்து தேய்க்காமல் போக்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி தான் விரிவாக காண இருக்கின்றோம்.
அதற்கு முன்பு இந்த குறிப்பிற்கு என்னென்ன பொருட்கள் தேவை என்பதை பார்க்கலாம்.
- வினிகர் – 4 டேபிள் ஸ்பூன்
- கல் உப்பு – 2 டேபிள் ஸ்பூன்
- பேக்கிங் சோடா – 2 டேபிள் ஸ்பூன்
- சலவை தூள் – 2 டேபிள் ஸ்பூன்
- எலுமிச்சை பழச்சாறு – 2 டேபிள் ஸ்பூன்
- தண்ணீர் – தேவையான அளவு
துரு பிடித்த பாத்திரத்தை எடுத்து கொள்ளவும்:
முதலில் துரு பிடித்த பாத்திரத்தை எடுத்து அதில் தேவையான அளவு தண்ணீரை ஊற்றி அடுப்பில் வையுங்கள்.
வினிகரை கலந்து கொள்ளவும்:
அடுத்து அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 4 டேபிள் ஸ்பூன் வினிகரை சேர்த்து நன்கு கலந்து கொதிக்க விடுங்கள்.
கல் உப்பை சேர்த்து கொள்ளுங்கள்:
பிறகு அதில் 2 டேபிள் ஸ்பூன் கல் உப்பையும் சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள்.
பேக்கிங் சோடாவை கலந்து கொள்ளுங்கள்:
பின்னர் அதில் நாம் எடுத்து வைத்துள்ள 2 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவை சேர்த்து நன்கு கலந்து கொதிக்க விடுங்கள்.
உங்களின் வீடு எப்பொழுதும் நறுமணத்துடன் இருக்க ஆரஞ்சு பழத்தோலை இப்படி பயன்படுத்துங்க போதும்
சலவை தூளை சேர்த்து கொள்ளுங்கள்:
அதனுடனே நாம் எடுத்து வைத்துள்ள 2 டேபிள் ஸ்பூன் சலவை தூளையும் சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள்.
எலுமிச்சை பழச்சாற்றினை கலக்கவும்:
இறுதியாக அதில் நாம் எடுத்து வைத்திருந்த 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை பழச்சாற்றினையும் சேர்த்து 10 நிமிடங்கள் நன்கு கொதிக்க விடுங்கள். பிறகு அதில் உள்ள தண்ணீரை கீழே ஊற்றி விட்டு லேசாக தேய்த்து கழுவி கொள்ளுங்கள்.
இப்போது அதில் உள்ள அனைத்து துரு பிடித்த கறைகளும் நீங்கி விடும்.
வீட்டில் ஒரே பல்லி தொல்லையா அப்போ இதை மட்டும் செய்யுங்க ஒரு பல்லி கூட வராது
வீட்டில் தொல்லை செய்யும் எலியை நிரந்தமாக விரட்ட அரிசி மாவு மட்டும் போதும்
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |