இப்படி தான் சேமித்து பொருட்கள் வாங்க வேண்டும்..!

Advertisement

Tips to Save a Little And Buy Things in Tamil

எப்போதும் நாம் பொருட்கள் வாங்கவேண்டும் என்று நினைத்தால் உடனே வாங்குவது மிகவும் கடினமான ஒன்றாக இருக்கும். அதாவது நாம் மாதம் மாதம் வாங்கும் சம்பளமானது நம்முடைய செலவுகளை மட்டும் செய்ய தான் இருக்கும். ஆனால் நாம் ஏதாவது ஒரு பொருட்கள் வாங்க வேண்டும் என்றால் உடனே அதற்கு தனியாக நாம் கடன் தான் வாங்குவோம். இது நம்முடைய அனைவரின் வீட்டில் நடப்பது தான்.  ஆகவே இதனை நாம் கடன் வாங்காமல் எப்படி வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவது என்று பார்க்கலாம். அதற்கு அருமையான டிப்ஸை பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl 

Tips to Save a Little And Buy Things in Tamil

Saving – 1 

நீங்கள் முதலில் சம்பளம் வாங்கினால் என்ன செய்வீர்கள். வீட்டில் உள்ள முக்கிய தேவையை பூர்த்தி செய்வீர்கள். ஆனால் அப்படி செய்ய கூடாது. அதாவது நீங்கள் சம்பளம் வாங்கிய உடன் சேமிப்பிற்கு என்று பணத்தை சேமிக்கவேண்டும். அதன் பின்பு உங்களின் தேவையை பூர்த்தி செய்து கொள்ளுங்கள். அதேபோல் ஒவ்வொரு நாளும் நீங்கள் இந்த மாதம் ஒரு பொருள் வாங்க போகிறீர்கள் என்றால், அந்த பொருளுக்கான மதிப்பை பார்த்து அதற்கு என்று பணத்தை சேமிக்கவேண்டும்.

50 பவுன் முதல் 100 பவுன் வரை சுலபமாக நகை சேர்க்க எளிமையான டிப்ஸ்

Saving – 2

இப்போது ஒரு பொருள் வேண்டும் என்றால் அதற்கு என்று சேமிக்கவேண்டும். உதாரணமாக நீங்கள் ஒரு பீரோ வாங்க போகிறீர்கள் என்றால் அதனுடைய விலையானது 20,000 ரூபாய் என்றால் உடனே பொருட்கள் தேவை என்றால் ஒரு 8 மாதம் எடுத்துக்கொள்ள வேண்டும். மாதம் மாதம் சம்பளம் வாங்கிய உடன் அதற்கு என்று தனியாக ஒரு 2500 ரூபாய் எடுத்து வைக்கவேண்டும். இப்படி 8 மாதம் செய்தால் பணம் சேர்ந்துவிடும். அதை வைத்து பீரோ வாங்கிவிடலாம்.

Saving – 3

மூன்றாவது நீங்கள் என்ன செய்வீர்கள் உங்கள் தேவையை பூர்த்தி செய்ய மிகவும் பொறுமை அவசியம். ஏனென்றால் கடன் வாங்கி இப்போது வேண்டுமானாலும் உங்கள் தேவையை பூர்த்தி செய்வீர்கள். ஆனால் அதற்கு மாதம் வட்டி அல்லது மாதம் EMI கட்டவேண்டும். ஆனால் நீங்கள் ஒரு 8 மாதம் கழித்து இந்த பொருட்கள் வாங்கினால் உங்களுக்கு அதற்கான வட்டி இல்லாமல் பொருட்கள் வாங்க முடியும்.

Saving – 4

பொருட்கள் வாங்கும் முதலில் கொஞ்சம் முன் பணம் கட்டினால் பொருட்கள் வாங்கலாம் என்று நினைக்காதீர்கள். அது மிகவும் கடுமையான வட்டி அதாவது நீங்கள் வாங்கும் பொருள் 20,000 ரூபாய் என்றால் அதனுடைய விலைக்கு 5,000 முதல் 6,000 வரை கூட EMI என்ற பெயரில் வாங்குவார்கள்.

பணத்தை சேமிக்க சிறந்த வழிகள்  

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil
Advertisement